Accaddemy

முச்சக்கர வண்டியில் அக்குரனை பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவியைத் தேடி...



பொகவந்தலாவ பகுதியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவரை பொய்யான வார்த்தைகளை கூறி முச்சக்கர வண்டியில் அக்குரன பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற குறித்த சிறுமி, மாலையாகியும் வீடு திரும்பவில்லையென பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுமியை பொகவந்தலாவ பகுதியில் உள்ள முச்சக்கர வண்டியில் அக்குரனை பகுதிக்கு ஏற்றிசென்றதாகவும், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காகவே அவர் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாரால் அக்குரன பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சிறுமியை மீட்டு வருவதற்கு பொகவந்தலாவ பொலிஸ் குழு ஒன்றும் அக்குரன பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் அக்குரனை பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவியைத் தேடி... முச்சக்கர வண்டியில் அக்குரனை பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவியைத் தேடி... Reviewed by Madawala News on 10/17/2016 02:20:00 PM Rating: 5