ஒரு சோகம்... அலுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்சேத இழப்பீட்டைக்கூட ( மஹிந்த ஆட்சியில் மதிப்பீடு செய்யப்பட்டது ) நல்லாட்சி வழங்கவில்லை..




அண்­மையில் அளுத்­க­மையில் தீயில் எரிந்து சாம்­ப­ளாகிய  அளுத்­கம
 'மல்­லிகாஸ்' ஆடை விற்­பனை நிலை­யத்தில் தீ ஏற்­பட்­ட­தற்­கான கார­ணத்தைக் கண்­ட­றி­வதில் வேண்­டு­மென்றே கால­தா­மதம் செய்­யப்­ப­டு­வ­தாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் குற்றம் சுமத்தினார்.

தீ விபத்து ஏற்­பட்டு சில நாட்கள் கடந்த பின்பு பொலி­ஸா­ரினால் இர­சா­யனப் பகுப்­பாய்வு செய்­வ­தற்­காக சேதத்­துக்­குள்­ளான விற்­பனை நிலை­யத்தின் மாதி­ரிகள் எடுத்துச் செல்­லப்­பட்­டாலும் ஒரு மாதத்துக்கு அதிகமான காலம் கடந்து விட்ட நிலையில் இது­வரை இர­சா­யனப் பகுப்­பாய்வு அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வில்லை என மல்­லிகாஸ் ஆடை விற்­பனை நிலைய உரி­மை­யாளர் எம்.ஜே.எம். சம்­சுதீன் மடவளை நியுஸுக்கு தெரிவித்தார். இர­சா­யனப் பகுப்­பாய்வு அறிக்கை ஓரிரு தினங்­களில் வெளி­யி­டப்­படும் என அளுத்­கம பொலிஸார் தெரி­வித்­தி­ருந்­தாலும் அது வேண்­டு­மென்றே கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வதாகவும் அதனால் தீ விபத்து சம்­பவம் தொடர்பில் தனக்குச் இருந்த சந்­தேகம் மேலும் அதிகரித்துள்ளதாக  குறிப்பிட்ட அவர்..

பொலிஸார் எனது வாக்­கு­மூ­லத்­தையும் பதிவு செய்­தார்கள். இவ்­வி­பத்தில் எனக்கு சந்­தேகம் நில­வு­வ­தாகத் தெரி­வித்­துள்ளேன். இந்த தீ விபத்து ஏற்­பட்­டுள்­ளதால் விற்­பனை நிலை­யத்தில் தொழில் புரிந்­த­வர்­களில்15 பேர்­க­ளி­னது குடும்­பங்கள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன.

மல்­லிகாஸ் விற்­பனை  நிலையம் ஏற்­க­னவே இரு தட­வைகள் இன­வா­தி­களால் தீ வைக்­கப்­பட்­டது.

இந்த விபத்து மூன்­றா­வது தட­வை­யாக ஏற்­பட்­டுள்­ளது. அதனால் இதில் எனக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. மூன்­றா­வது தடவை ஏற்­பட்­டுள்ள தீ விபத்து தொடர்­பான விசா­ர­ணைகள் கால தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­வது எனக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.


எனவே இது தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்தி தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூக நல அமைப்புகளும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றார்.

மேலும் முஸ்லீம்களை காட்டியும் அலுத்கம பேருவளை விடயத்தை காட்டியும் ஆட்சிக்கு வந்த இந்த அரசு முஸ்லீம்கள் விடயத்தில் பொடுபோக்காக நடந்துகொள்வதாக குறிப்பிட்ட அவர் ..

கடந்த மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற அலுத்கம கலவரங்களில் ஏற்பட்ட பொருட்சேதங்களுக்காக மஹிந்த அரசால் மதிப்பீடு செய்யப்பட்ட 25 கோடி இழப்பீட்டை கூட இந்த நல்லாட்சி பெற்றுத்தரவில்லை எனவும் அமைச்சர்களுக்கு வாகனம் இறக்குமதி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய முடிந்த இந்த அரசுக்கு இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்க முடியாமல் போனது தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

மல்லிகாஸ் உரிமையாளர் மடவளை நியுஸுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி...


ஒரு சோகம்... அலுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்சேத இழப்பீட்டைக்கூட ( மஹிந்த ஆட்சியில் மதிப்பீடு செய்யப்பட்டது ) நல்லாட்சி வழங்கவில்லை.. ஒரு சோகம்... அலுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்சேத இழப்பீட்டைக்கூட ( மஹிந்த ஆட்சியில் மதிப்பீடு செய்யப்பட்டது )  நல்லாட்சி வழங்கவில்லை.. Reviewed by Madawala News on 10/28/2016 03:40:00 PM Rating: 5