Oceas

யாழில் மஹேலவுக்கு கடும் வரவேற்பு...



இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேலஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் யாழ் பருத்தித்துறையில் நிதிசேகரிப்பதற்காக நடைபவனி ஒன்றைமேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில்,குறித்த நடைபவனி இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது இலங்கைகிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவை அவரது தீவிர ரசிகை ஒருவர்மிகவும் இறுக்கமாக கட்டித் தழுவி தனதுஆனந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மஹேலவிற்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா? என இந்த விடயம் அனைவரையும் வியப்பில்ஆழ்த்தியுள்ளது.

காலி, கராப்பிட்டிய சிறுவர் புற்றுநோய் மருத்துவமனையை அமைப்பதற்காகவே நிதிசேகரிக்கும் நோக்கில் இந்த நடைபவனி இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை,இந்த நிகழ்வில் முத்தையா முரளிதரன், அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும்பொலிவூட் நட்சத்திரம் ஜக்குலின் பெர்னாண்டஸ், தொழில் முயற்சியாளர் ஒட்டாராகுணவர்தன, நடிகை யுரேனி நொஷிகா உள்ளிட்ட பலபிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

28 தினங்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நடைபவனி எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் மஹேலவுக்கு கடும் வரவேற்பு... யாழில் மஹேலவுக்கு கடும் வரவேற்பு... Reviewed by Madawala News on 10/07/2016 02:18:00 PM Rating: 5