Kidny

Kidny

இன்று மத்திய கிழக்கின் நெருக்கடியின் பின்னால் ஒழிந்துள் இரகசியங்கள்.-Muja ashraff -

இன்று மத்திய கிழக்கில் தோண்றியுள்ள நெருக்கடி நிலை இஸ்லாத்தின் இரு பிரிவுகளுக்கிடையிலான கோட்பாட்டு ரீதியிலான மோதல் அல்ல மாறாக இரு கோட்பாடுகளை அனுசரிக்கும் மக்கள் செறிந்து வாழும் இருநாடுகளான சவூதிக்கும், ஈரானுக்கும் இடையிலான அதிகார மோதலின் பிரதிபலிப்பே ஆகும்.

மத்தியகிழக்கின் அதிகார கட்டமைப்பை தன்வசப்படுத்துவதற்கும் அதன் பரம்பலை விஸ்தீரணம் செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சியின் விளைவாக இரு நாடுகளுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிப்போரின் விளைவுகளையே இன்று மத்திய கிழக்கு நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.

ஒரு புறம் சவுதி அறேபியா வளைகுடா நாடுகளை தனது தலைமையில் ஒருங்கினைப்பதற்கும்  மறுபுறம் ஈரான் அகன்ற பாரசீக கனவுடன் காய்களை நகர்த்த தொடங்கியதன் விளைவே கிளர்ச்சிகளும், ஆர்பாட்டங்களும் தீவிரவாத செயற்பாடுகளுக்கும் தத்தம் ஆதரவுகளை வழங்க தொடங்கியதாகும்.

இதனை மத ரீதியான வேறுபாடு என்று குறிப்பிடுவதை விட அதிகாரவர்க்கத்திற்கான போட்டி மத ரீதியாக பரிணமித்தள்ளது என்று கூறுவது சாலப்பொருத்தமாகும்.

ஏணனில் மன்னர் ஷாவின் காலப்பகுதிகளில் ஷியா ரீதியான கோட்பாட்டுத்தளம் ஈரானில் உருவாகினாலும் 1980களின் ஆயதுல்லா அல் கொமைனியினால் ஈரானில் ஏற்படுத்தப்பட்ட புறட்சியின் பிற்பாடே அகன்ற பாரசீக கனவு தலைதூக்க ஆரம்பித்தது அதன் அடிப்படையிலேயே காய்களை நகர்த்த தொடங்கியது. மன்னராட்சிக்கெதிராக குரல்கொடுத்தமையும் பாறாளுமன்றத்தை காட்டிலும் அதிகாரமிக்க மத ரீதியான ஆன்மீக சபையினை உருவாக்கி தனது அறசியல் நகர்தலை கச்சிதமாக நிறைவேற்றிய வேலை மறுபுறம் சவூதி அறேபியாவோ தனது மன்னராட்சிக்கு எதிரான தடங்கலாக ஈரானை பார்க்க ஆரம்பித்தது.இதனை தமக்கு சாதகமாக பயண்படுத்திக்கொண்ட உலக வல்லரசுகள் ஷியா ஸூன்னி என்ற மத ரீதியான பிரச்சினையாக உருமாற்றி மத்தியகிழக்கின் சூட்டில் குளிர்காய ஆரம்பித்தன.


சவூதி அறேபியாவோ ஈரானின் வளர்ச்சியினை எந்தவகையிலாவது தடுக்கவேண்டுமன யோசித்துக்கொண்டிருந்த வேளை
தனது ஆட்சிக்கான அச்சுருத்தலன  கருதிய ஈராக் அதிபர் சதாம் ஹூசையின்
1980களில் ஈரானின் மீது போர்தொடுத்த போது அதற்கான ஆதரவையும் நிதி உதவியையும் வழங்கியது. அது போல் 1987ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஈரானிலிருந்து சவுதிஅறேபியாவுக்கு யாத்திரை சென்ற குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட கிளர்ச்சியினை அடக்கிய விதம் போண்றன இருநாடுகளுகிடையிலான விரிசலை மேலும் பலப்படுத்தின இதன் விளைவாக ஈரான் தமக்கு சார்பாக போரிடும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பை பலப்படுத்தியமையினையும் குறிப்பிடலாம்.


இந்த அதிகாரப்போட்டியின் பரம்பல் மெல்ல மெல்ல பரிணமிக்கத் தொடங்கி இன்று ஈராக் சிரியா யேமன் பஹ்ரைன் வரை வியாபித்து நிற்கின்றது. ஈராக்கில் நூரி அல் மலிக்கிக்கு எதிரான நகர்வுகள் தொடங்கி யேமனில் அதிபர் அப்துல் ஸலாவிற்கு ஆதரவாக சவூதி நேரடியாகவும் ஹூதி கிளர்சியாளர்களுக்கு ஆதரவாக ஈரான் மறைமுகமாகவும் சிரியாவில் அதிபர் பஸர் அல் அஸாத்துக்கு ஆதரவாக ஈரானும் அதற்கு சார்பாக ஹிஸ்புல்லாவும், கிளர்ச்சி குளுக்களுக்கு ஆதரவாக சவூதியும் போர்நடவெடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன. அதுபோல் சவுதி தனது மன்னராட்சியினை தக்கவத்துக்கொள்ளும் நோக்குடன் எகிப்தில் இஃவான்களுக்கு எதிராக ஸிசியுடன் கைகோர்தமையும் பஹ்ரைனில்  ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றமை தியூனிசிய,லிபியா போண்ற அறபுலக எழுச்சியினை தமது ஆட்சிக்கெதிரான கண்ணோட்டமாக பார்த்தையும் குறிப்பிட முடியும்.


இவ்வாறு இருநாடுகளும் பிராந்தியத்தில் ஏற்பட்ட அறசியல் சமநிலையற்ற தன்மையினை தமக்கு சாதகமாக பயண்படுத்திக் கொண்டு செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தன.அதில் ஒன்றுதான் பஹ்ரைனில் ஷியாக்களின் ஆர்பாட்டங்களை சவூதி அதிகார பலம்கொண்டு அடக்கியமை தனது ஆதரவுடன் இயங்கிய யேமன் அறசாங்கத்தை ஷியா கொள்கையில் இயங்கும் ஹூதி கிளர்சியாளர்கள் போரிட்டு தூக்கியரிந்தவேளை ஈரான் மீது குற்றம் சுமத்தியும் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் படி அமேரிக்காவை கேட்டுக்கொண்டதையும் குறிப்பிடலாம்.


ஆனால் அமேரிக்காவின் பதிலோ வேறுவிதமாக அமைந்தது.அதற்கு காரணம் இல்லாமல் இல்லை தனது மேற்காசியா கொள்கை வகுப்பின் முதல் இரு காரணிகளான எண்ணெய் வினியோகமும் இஸ்ரேலிய இருப்பும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மேற்காசியா கொள்கை வகுப்பை மீளமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது அதன்படி மேற்காசியா பிராந்திய நாடுகள் தமது நலனை தாமே பாதுகாக்கவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டன. இந்த எதிர்பாராத ஒத்துழையாமையால் தனித்துவிடப்பட்ட சவுதி அறேபியாவோ தனது இருப்பையும் பிராந்திய நலனையும் பாதுகாக்கும் நோக்கில் தானே நேரடியாக படைநடவெடிக்கையில் இறங்கியது.


இவ்வாறு சவூதி அறேபியாவுக்கும் ஈரானுக்கும்இடையிலான அதிகாரப்பொராட்டத்தில் ஸூன்னி ஷியா பிரிவினர் ஆதிக்கமும் முக்கியத்துவம் பெருகிறது.சவூதியை பொருத்தவரை எந்த இடத்திலும் ஷீயாக்களை தலைதூக்க விடாமல் தடுப்பதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. வழமையாக சவுதி அரசாங்கம் தனது ஆட்சிக்கெதிராக உள்நாட்டில் குழப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் ஷியா பிரச்சினைகளை கையிலடுப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

1979ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் அமெரிக்கா என்ற பொதுநட்பின் ஊடாக இருநாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்பட்டவையே எப்போது மன்னர் ஷாவை ஒப்படைக்கும்படி அமெரிக்க பிரஜைகளை ஈரான் சிறைப்பிடித்ததோ அதனை தொடர்ந்து பிரச்சினைகள் ஆரம்பிக்க தொடங்கிவிட்டன அதன் பிற்பாடு எரிபொருள் விலையேற்றத்தில் ஆரம்பித்த பிரச்சினை இன்றுவரை ஏதோ ஓர் அடிப்படையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது

இதனை தமக்கு சாதகமாக பயண்படுத்திக்கொண்ட மேற்குலக ஊடகங்கள் இதனை ஷியா ஸூன்னி என்ற மதரீதியான மோதலாக காட்டி அவற்றுக்கிடையே மேலும் பிரிவுகளை ஏற்படுத்தி ஆனந்தம் கொள்கின்றன
மேற்குலகின் ஊடக தர்மத்தின் ஊடாக இப்பிரச்சினையை அணுக முற்படுவது எமது கண்களை நாமே குத்திக்கொள்ளவதற்கு சமமானது ஏணனில் அவர்களின் ஊடக தர்மம் நிறமூட்டப்பட்ட கண்ணாடிக்கு ஒப்பானதாகும்.

இன்று மத்திய கிழக்கின் நெருக்கடியின் பின்னால் ஒழிந்துள் இரகசியங்கள். இன்று மத்திய கிழக்கின் நெருக்கடியின் பின்னால் ஒழிந்துள் இரகசியங்கள். Reviewed by Madawala News on 10/07/2016 09:17:00 PM Rating: 5