Accaddemy

“தீமைக்கு எதிராக உண்மை எப்போதும் வெல்லும்” என்ற கோஷத்துடன் மோடியின் உருவபொம்மை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் .



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை ராவணன் போல் சித்தரித்து அவர்களது உருவபொம்மையை எரித்து  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள்  தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்

பசுவின் பெயரால் மத நல்லிணக்கம் நாட்டில் குறைவடைந்துள்ளது சிறுபான்மைச்சமூகம் நாட்டில்   வாழ அச்சப்படும் சூழ்நிலையை உருவாக்குகின்றனர் என கூறி மாணவர்கள் ஆர்ப்படடம் செய்தனர்

இது குறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் ஜகதேஷ் குமார் கூறும்போது, “உருவபொம்மை எரிப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம், மேலும் அது குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்றார். உருவபொம்மை எரிப்பில் இவரது உருவபொம்மையும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது மத்திய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் போக்கு தொடர்கிறது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக ஆர்பாட்டக்காரர்கள் கூறினர்.

பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மட்டுமல்லாது, பாபா ராம்தேவ், சாத்வி பிராக்யா, நாதுராம் கோட்சே, அசாரம் பாபு மற்றும் துணை வேந்தர் ஆகியோரது உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டதோடு, “தீமைக்கு எதிராக உண்மை எப்போதும் வெல்லும்” என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் மாணவர்கள் காட்டியதாக கூறப்படுகிறது.

“தீமைக்கு எதிராக உண்மை எப்போதும் வெல்லும்” என்ற கோஷத்துடன் மோடியின் உருவபொம்மை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் . “தீமைக்கு எதிராக உண்மை எப்போதும் வெல்லும்” என்ற கோஷத்துடன் மோடியின் உருவபொம்மை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் . Reviewed by Madawala News on 10/13/2016 10:34:00 PM Rating: 5