Free Space

முஸ்லிம்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ.. ஆட்சியை கைப்பற்ற முஸ்லிம்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம்கள் இடையில்  பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் காரியாலயத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் வைத்துள்ள நம்பிக்கையை தன் பக்கம் வென்றெடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பினை மஹிந்த தரப்பினர் ஏற்பாடு செய்துள்ளதாகவும்  குறிப்பிடத்தக்களவு ( சுமார் 500 பேர்) முஸ்லிம் சமூகத்தினர் கலந்துகொண்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம்களின் மத அடையாளங்கள் திட்டமிட்டு கேவலப்படுத்தப்பட்டமை, வர்த்தகரீதியில் ஓரங்கட்டப்பட்டமை, இனவாதம்  போன்ற விடையங்கள் மஹிந்த ஆட்சியின் ஆசீர்வாதத்துடன் நடத்தப்பட்டதாக கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில் மஹிந்தவின் ஆட்சியை வீழ்த்தி மைத்திரி, ரணில் தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும் பிரதான பங்கினை வகித்தது பேசுபொருளாக காணப்பட்டது அறிந்ததே.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களை அழைத்து  சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளது ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் முஸ்லிம்களின் ஒத்துழைப்பை வேண்டி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் ..

 


 
முஸ்லிம்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ.. ஆட்சியை கைப்பற்ற முஸ்லிம்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் ... முஸ்லிம்களை சந்தித்த  மஹிந்த ராஜபக்ஷ..  ஆட்சியை கைப்பற்ற முஸ்லிம்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் ... Reviewed by Madawala News on 10/05/2016 06:07:00 PM Rating: 5