கைய­டக்கத் தொலை­பே­சியை கவ­ன­மாக பயன்­ப­டுத்­துங்கள்.



கைய­டக்கத் தொலை­பே­சியை கவ­ன­மாக பயன்­ப­டுத்­துங்கள் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஒரு­முறை என்­னி­டமே கூறி­யி­ருந்தார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச் ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

ஆனால் ஜன­வரி எட்டு புரட்­சிக்குப் பின்னர் எமது அர­சாங்­கத்தில் அவ்­வாறு தொலை­பேசி பதிவு செய்­யப்­ப­டு­வ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

கேள்வி:நீதி­ப­தி­யொ­ரு­வரின் தொலை­பேசி பதிவுசெய்­யப்­ப­டு­வ­தாக (டேப்) கூறப்­ப­டு­கின்­றதே ?

பதில்: அது குறித்து எனக்கு தெரி­ய­வில்லை. ஆனால் அந்த குற்­றச்­சாட்டுக் குறித்து விசா­ரணை நடத்­தப்­படும். இதில் ஜனா­தி­பதி தெளிவாக இருக்­கின்றார். ஜன­வரி 8 ஆம் திக­திக்கு பின்னர் இவ்­வாறு எதுவும் நடை­பெ­ற­வில்லை.

கேள்வி:தொலைத் தொடர்பு ஆணைக்­கு­ழுவின் பணிப்­பா­ள­ராக இருக்கும் ஒருவர் இந்தக் குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளாரே ?

பதில்:அது தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­படும்.

கேள்வி:முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது தொலை­பே­சியும் பதிவு செய்­யப்­ப­டு­வ­தாக கூறி­யுள்­ளாரே ?

பதில்: அவ­ருக்கு அது நன்­றாக தெரிந்த விடயம். அவர் காலத்தில் அது அதி­க­மாக நடந்­தது. கைய­டக்கத் தொலை­பே­சியை கவ­ன­மாக பயன்­ப­டுத்­துங்கள் என்று அவர் ஒரு­முறை என்­னி­டமே கூறி­யி­ருந்தார். ஆனால் அவரின் தொலை­பே­சியை அவ­ரது வீட்டில் பதிவு செய்­கின்­றார்­களோ தெரி­ய­வில்லை.

கேள்வி: சார்க் மாநாடு தொடர்பில் எடுத்த முடிவு சரி­யா­னதா?

பதில்: அதுதான் எமது வெளியு­றவுக் கொள்­கை­யாகும்.

கேள்வி:சார்க் அமைப்பை புதி­தாக மறு­சீ­ர­மைக்கப் போவ­தாக கூறப்­ப­டு­கின்­றதே .

பதில்: அது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்படும். அதாவது மிகவும் பலமுள்ளதாக இந்த சார்க் அமைப்பை உருவாக்க வேண்டும். ஆசியான் மற்றும் ஆபிரிக்க அமைப்புக்கள் மிகவும் வலுவாக உள்ளன.

கைய­டக்கத் தொலை­பே­சியை கவ­ன­மாக பயன்­ப­டுத்­துங்கள். கைய­டக்கத் தொலை­பே­சியை கவ­ன­மாக பயன்­ப­டுத்­துங்கள். Reviewed by Madawala News on 10/06/2016 09:20:00 AM Rating: 5