Free Space

சிலாபம் கோடீஸ்வர வர்த்தகர் கொலை அப்டேட்ஸ்.



சிலாபம் வட்­டக்­களி பிர­தே­சத்தில் வீட்டின் அறை­யி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட கோடீஸ்­வர வர்த்­தகர் மூச்சுத்திணரலுக்கு உள்­ளாக்­கப்­பட்டே கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது சடலம் சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற பிரேத பரி­சோ­த­னையின் மூலம் தெரிய வந்­தி­ருப்­ப­தாக வைத்­தி­ய­சா­லையின் பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி டீ.கே. விஜே­வர்­தன நீதி­மன்­றத்­திற்கு சமர்­ப்பித்­துள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

சிலாபம் மாவட்ட நீதி­ப­தியும் நீதிவா­னு­மா­கிய சிவந்த மஞ்­ச­நா­யக்கா கொலை செய்­யப்­பட்­ட­வரின் வீட்­டுக்குச் சென்று நீதிவான் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பின்னர் சடலத்தை சிலாபம் வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்று பிரேத பரி­சோ­தனை மேற்­கொண்ட பின்னர் அதன் அறிக்­கை­யினை நீதி­மன்­றத்­திற்குச் சமர்ப்­பிக்­கு­மாறு சிலாபம் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

சிலாபம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வட்­டக்­களி சென் ஜூசேவாஸ் தேவா­ல­யத்­திற்கு அருகில் உள்ள உள் வீதியில் வசித்த டப். நிவ்டன் ரோய் பெர்­னாண்டோ (வயது 45) என்­ப­வரே இவ்­வாறு கடந்த திங்­கட்­கி­ழமை மாலை கொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலையுடன் தொடர்புடை யவர்களைக் கைதுசெய்ய சிலா பம் பொலிஸார் தொடர்ந்து விசார ணைகளை மேற்கொண்டு வரு கின்றனர்.

சிலாபம் கோடீஸ்வர வர்த்தகர் கொலை அப்டேட்ஸ். சிலாபம் கோடீஸ்வர வர்த்தகர் கொலை அப்டேட்ஸ். Reviewed by Madawala News on 10/06/2016 10:50:00 AM Rating: 5