Kidny

Kidny

கோத்தாவை காப்பாற்ற ஜனாதிபதி செயற்படுவது என்ன மாதிரியான டிசைன்?முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவையோ இரா­ணுவ மற் றும் கடற்­படைத் தள­ப­தி­க­ளையோ காப்­பாற்றும் நோக்கில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­ பால சிறி­சேன செயற்­ப­டு­வா­ராக இருந் தால், அதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வன்­மை­யாகக் கண்­டிக்கும் என்று யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரிவு, இலஞ்ச, ஊழல் ஆணைக்­குழு ஆகி­யவை அர­சியல் நிகழ்ச்சி  நிரலின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­வைத்­துள்ள கூற்று தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா இவ்­வாறு கூறினார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில், ஊழல், குற்­ற­மற்ற ஆட்­சி­யொன்றை நிறுவும் முக­மா­கவே இலங்­கை­யி­லுள்ள பெரும்­பான்மை சமூ­கத்­த­வரும் சிறு­பான்மை இனத்­த­வரும் ஒன்­று­தி­ரண்டு புதிய ஆட்­சியைக் கொண்­டு­வந்­தார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பத­வி­யேற்க வழி­ச­மைத்­தனர்.

அவ்­வாறு இருக்கும் போது ஊழல் புரிந்­த­வர்கள், குற்றம் இழைத்­த­வர்கள் ஆகி­யோரை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களில் அரசு செயற்­ப­டு­மானால் அதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது.

மேலும் ஜனா­தி­பதி என்ன அர்த்­தப்­பட அதைக் கூறி­யுள்ளார் என்­பதை நாங்கள் முதலில் தெரிந்­து­கொள்ள வேண்டும். பத்­தி­ரி­கையில் வந்த செய்தி உண்­மை­யாக இருந்தால், ஜனா­தி­பதி கூறி­யுள்ள கருத்தை நாம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இரா­ணு­வ­மாக இருக்­கலாம் அல்­லது பொது மக்­க­ளாக இருக்­கலாம் ஊழல்­வா­திகள், குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ரான நீதி விசா­ரணை நடாத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது மாத்­தி­ர­மல்ல நீதியைக் கொண்­டு­வர அது தேவை­யா­ன­துங்­கூட. இதி­லி­ருந்து நாம் எக்­கா­ரணம் கொண்டும் பின்­வாங்க முடி­யாது. அர­சாங்­கமும் பின் வாங்­கக்­கூ­டாது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மக்கள் வாக்­க­ளித்த போது ஊழல் புரிந்தோர், குற்றம் செய்தோர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தகுந்த நட­வ­டிக்­கையை எடுப்பார் என்ற நம்­பிக்­கையின் பேரி­லேயே இலங்கை மக்கள் அவ­ருக்கு வாக்­க­ளித்­தார்கள். இதே­வேளை கடந்த ஆட்­சியை அவர்கள் தோற்­க­டித்­தார்கள்.

செய்­யப்­பட்ட ஊழல்கள் குற்­றங்கள் என்­ப­வற்­றுக்கு நீதி கிடைக்க வேண்டும். விடிவு ஏற்­பட வேண்டும்.

மீண்டும் இவ்­வா­றான நிலைகள் இலங்­கையில் இடம்­பெ­றக்­கூ­டாது என்ற ஒரே கார­ணத்­தி­னா­லேயே மக்கள் ஆட்சி மாற்­றத்­தைக்­கொண்டு வந்­தார்கள். எனவே மக்­க­ளு­டைய நம்­பிக்­கை­யையும் எதிர்­பார்ப்­பையும் வீண­டிக்கும் முறையில் நடந்­து­கொள்­வது ஏற்­பு­டைய ஒரு விட­ய­மல்ல.

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை காப்­பாற்­றவோ, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளைக் காப்பாற்றவோ, ஜனாதிபதியவர்கள் அவ்வாறானதொரு கருத்தைக் கூறியிருந்தால் அதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் இச்செயற்பாடானது தவறான விடயம் என்பதை விட மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு விரோதமான ஒரு விடயமுமாகும்.  
கோத்தாவை காப்பாற்ற ஜனாதிபதி செயற்படுவது என்ன மாதிரியான டிசைன்? கோத்தாவை காப்பாற்ற ஜனாதிபதி செயற்படுவது என்ன மாதிரியான டிசைன்? Reviewed by Madawala News on 10/16/2016 10:56:00 AM Rating: 5