Accaddemy

திருச்சி விமான நிலையத்தில் மைத்திரி வருகையால் பயணிகள் பெரும் அவதி : இந்திய ஊடகங்கள்.



இலங்கை அதிபர் மைத்திரி பால சிறீ சேனா கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று(திங்கள் கிழமை) பகல் 2.30மணியளவில் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். அவருக்கு தமிழக அரசு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனிச்சாமி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதிபர் வருகையால் விமான நிலையத்தில் பயணிகளை அனுமதிக்காமல் இருந்ததால் வழிஅனுப்ப வந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

கோவா மாநிலத்தின் கடற்கரை பகுதியான மபோர் எனும் இடத்தில் வங்க கடல் பகுதியில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின்(பிம்ஸ்டெக்) மாநாடு நடந்தது. இதில் இலங்க அதிபர் மைத்ரி பால சிறீ சேனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர் மோடியை சந்தித்து இந்திய மீனவர் பிரச்சனை, மற்றும் இரு நாட்டு ஒற்றுமை குறித்து பேசினார்.

பின்னர், இலங்க அதிபர் மைத்திரி பால சிறீசேனா பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு கோவாவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று (திங்கள் கிழமை) பகல் 2.30மணியளவில் திருச்சி வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பழனிச்சாமி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு சென்றார். அதிபர் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் பலகட்ட பாதுகாப்புகள் போடப்பட்டு இருந்தன. வெளிநாடு செல்லும் பயணிகளை பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

வெளிநாடு செல்லும் பயணிகளை வழியனுப்ப வந்த உறவினர்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப் படவில்லை. அவர்களை விமான கேட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர். இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானர்கள். விமான நிலையத்தில் தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்களை கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று பல்வேறு ஊர்களில் இருந்து வெளிநாட்டிற்கு வந்த பயணிகள் சாலையோரம் வெயிலில் அமர்ந்திருந்தனர். இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாவதையும் காண முடிந்தது. விமான நிலையத்தில் பார்வையாளர் மடத்தில் கூட யாரும் அனுமதிக்கவில்லை. ஆனால், இலங்க அதிபர் மைத்திரி பால சிறீ சேனா திருச்சி வருகையை ஒட்டி எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் பல்வேறு கட்ட பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிறோம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

- இந்திய ஊடகம்-
திருச்சி விமான நிலையத்தில் மைத்திரி வருகையால் பயணிகள் பெரும் அவதி : இந்திய ஊடகங்கள். திருச்சி  விமான நிலையத்தில் மைத்திரி  வருகையால் பயணிகள் பெரும் அவதி : இந்திய ஊடகங்கள். Reviewed by Madawala News on 10/17/2016 06:28:00 PM Rating: 5