Madawala News

ஆங் சாங் சூகி ஆட்சிக்கு வந்த பிறகு மியன்மாரில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையின் விபரம்..ராணுவத்தின் அதிகாரப்பூர்வமான பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த புதன்கிழமை ராணுவம் நடத்திய சோதனையின்போது, கத்தி, துப்பாக்கி மற்றும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியவர்களில் 10 பேர்களை கொன்றதாக தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மவுண்டவ் மற்றும் யதா டவ்ங் பகுதியில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய குழு அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் 25 வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.அனடொலு பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் பேசிய 74 வயது ரோஹிங்கிய முதியவர், ராணுவத்தின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து பேசியுள்ளார்.

எங்கள் பகுதிக்கு வந்த ராணுவம், தாக்குதல் நடத்திய குழு எங்கே என்று கேட்டனர், நாங்கள் அது போன்று யாரும் இங்கே ஒளிந்துகொண்டு இருக்கேவில்லை என கூறினோம்.

அதற்கு ராணுவ தளபதி வேசிக்கு பிறந்தவனே, எங்களிடம் பொய் கூறுகிறாயா என்று கேட்டு, அனைவரின் வீட்டையும் எரித்து நாசம் செய்யுங்கள் என ராணுவ வீரர்களுக்குகட்டளையிட்டதாக முதியவர் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டையும் தீ வைத்து எரித்துள்ளனர், தனது பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அந்த முதியவர்.

பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, அவர்கள் எந்த நாட்டு குடிமக்கள் மற்றும் எந்த அமைப்பை சார்ந்தவர்கள் என தெரிவிக்ககூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை என தெரிவித்தார்.

சென்ற மாதம் அரக்கன் பகுதியில் மட்டும் 3000 வழிபாட்டடு தளங்கள் இடிக்க அரசு உத்தரவுவிட்டது, அவற்றில் 12 மசூதிகள் மற்றும் 35 மதரசாக்கள் அடக்கம் ஆகும் . இவை அனுமதி பெறாமல் இயங்கியதாக பௌத்த இனவாத அரசு காரணம் தெரிவித்துள்ளது . அரசின் இந்த திட்டத்தை விரும்பாத வங்காளிகள் மசூதிகளை இடிக்க உதவி செய்து இருக்கலாம் .

கடந்த செவ்வாய்க்கிழமை மியன்மார் அரசாங்கம் பங்களாதேஷ் நாட்டின் உதவியை நாடியுள்ளது. பங்களாதேஷ் எல்லையை ஒட்டியுள்ள எல்லைகள் மூடப்பட்டுள்ளது. 400 க்கும் மேற்பட்ட பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு நடந்த கலவரத்திற்கு பிறகு தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, தற்போதைய அப்பாவி மக்களையும் கைது செய்து வருகிறது மியன்மார் அரசு. அப்பாவி ரோஹிங்கிய பெண்களும் பெரும் அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

இந்த வாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 90 பேர்கள் பலியாகியுள்ளனர், அவர்களில் 4 பேர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் 4 பேர்கள் ராணுவ வீரர்கள் என்பது இதுவரை கிடைத்த செய்திகள் ஆகும் .

கடந்த வாரம் மூன்று காவல் நிலையம் தாக்கப்பட்டுள்ளது சம்பவம் நடந்த அன்றே இரண்டு பேரை பிடித்துள்ளதாககாவல்துறை தெரிவித்துள்ளது, அவர்கள் இருவரும் மியான்மார் குடிமக்கள் அல்லது உள்ளூர் வங்காளிகளாக இருக்கக்கூடும் என தெரிவித்தனர்.

அக்டோபர் 3ம் தேதி ஆங் காங் சூகி தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்திற்கு ரோஹிங்கிய விடயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகான அழைப்பு விடுத்துள்ளார்.

சூகி ஆட்சிக்கு வந்த பிறகு சர்வதேச அளவில் ரோஹிங்கிய பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது, ஆனால் இதற்கு நாட்டின் அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களால் புத்த கலாச்சாரம் சிதைந்துவிடும் என அஞ்சுவதாக கூறுகின்றனர்.சூகி நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நிய முதலிடுகளை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
புத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே சுமுக உறவு ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால் இந்த நல்ல சிந்தனை ஏற்பட இனவாத சிந்தனை இடம் கொடுக்குமா என்பதே கேள்விக்குறி !

– அபூஷேக் முஹம்மத் –

Madawala News

About Madawala News -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :