Ad Space Available here

பல்கலைக்கழகம், அல்லது அரபிக் கல்லூரிகள் தொடர்பாக வரும் மோசமான செய்திகள்.. நம் செய்ய வேண்டியது என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும். 

அன்புத் தோழமைகளே!
 இன்று முகநூல் மற்றும் இணையச்செய்திகளின் ஊடாக வைரலாக பரவிவரும் செய்திகள்தான் ஏதாவதொரு பல்கலைக்கழகம், அல்லது அரபிக் கல்லூரிகள் தொடர்பான மோசமான கருத்துக்களும், புணைக்கப்பட்ட செய்திகளும் காணப்படுவதை அவதானிக்கிறோம்.


- இது யாரோ ஒருவர் மீதான தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு சமூகத்தையும் பாதிக்கும் விதமான கருத்துக்களையும், கட்டுரை ஆக்கங்ளையும் எழுதித் தள்ளுவது என்பது மோசமான செயற்பாடுகளில் ஒன்றாகும்.


- இன்று நாட்டில் முஸ்லிம் சமூகம் கௌரவமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் முதுகெழும்பான கல்வித்துறையானது அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டு வருகிறது.

அப்படிபட்ட சமூகத்தின் கல்வித்தரத்தை உடைத்து சின்னாபின்னமாக்கும் செயற்பாடுகளும் நாளாந்தம் இடம்பெறத்தான் செய்கிறது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் கல்வியானது பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரைசென்று அரபிக்கல்லூரிகள் மூலமும் வளர்ச்சிகண்டுவருவதை அவதானிக்கிறோம்.


- பொதுவாக பல்கலைக்கழகம் என்பது பல்கலாச்சார சூழலைக் கொண்டவையாகும் அதுபோலவே அரபிக்கல்லூரிகளும்,  பல வித்தியாசமான கலாச்சார விழுமியங்களை கொண்டவர்களை உடைய கல்விக்கூடங்களாக இருக்கின்றன.

இவ்வாறான இடங்களில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவரால் தப்பு தவறுகள் நடைபெறுவது வழமை,  அவ்வாறான தவறுகளை மிக நிதானமாகவே நாம் அனுகி தீர்வு காண வேண்டியிருக்கிறது.

இதற்கு மாற்றமாக சமூத்தை திருத்த வேண்டுமென்று குறித்த தவறுக்கான தீர்வினை பெற இணைங்களின் மூலமும் எமது காத்திரமான படைப்புக்கள் மூலமும் தவறை சித்தறித்து காட்ட முயற்ச்சிப்பது தவறாகும். இதனால் பயனடைவது யார்?  இவ்வாறான வழிமுறையால் பாதிப்படைவது யார்?  என்பது பற்றி சிந்திக்க. வேண்டியுள்ளது.


- இன்று ஊடகம் என்பது  அல்லாஹ் எமக்குத் தந்த மிகப்பெரும் அருட்கொடையாகும். அதை நாம் நுனுக்கமாகவும் சரியாகவும் பயன்படுத்த வேண்டும், முறை தவறினால் எம்மை பாவமெனும் பாதாளத்தினுள் தள்ளிவிடும். இன்று சில சகோதர சகோதரிகள் அல்லது செய்தி நிறுவனங்கள் தம்மை அடையாளப்படுத்த வீணான மோசமான கருத்துக்களை இணையங்களில் பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும்.


- அதுபோல் இலங்கையில் காணப்படும் முஸ்லிம் பல்கலைக்கழகமாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் காணப்படுகிறது இது முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கான ஒரு களமாகும். அது இன்று சில விசமிகளால் தூசிக்கப்படுவது வேதனையளிக்கிறது. குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக பல முன்னுக்குப்பின் முரணான தப்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.  குறித்த பல்கலைகழகத்தில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனாலே தவறுகள் நடைபெறுவதாகவும் எமது சகோதரிகள் வழிகெட்டு நெறிபிறழ்ந்து செல்வதாகவும் குற்றம் சுமத்துகின்றனர். சிலவேளை அவ்வாறு இடம்பெருகிறது என்றால் அது யாருடைய தவறு?  பெண் பிள்ளைகளினுடையதா  அல்ல சமூகத்தினுடையதா?  சிந்தியுங்கள்!

பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்க பிடியில் இருந்து எமக்கான பல்கலைக்கழகத்தை மீட்க முயற்ச்சித்தோமா?  கிழக்குமாகாணத்தின் அரசியலை தம்கையில் கொண்டுள்ள முஸ்லிம் அரசியல் தலமைகளுக்கு இதுவிடயத்தில் அழுத்தம்  கொடுத்தோமா?  அல்லது இதற்கான தீர்வுதான் என்ன?  எமது பெண் பிள்ளைகளை அனுப்பாமல் வீட்டிலே முடக்கிவைப்பதா தீர்வு!

- எனவே ஒருவரினுடைய தவறை திருத்துவதற்காக வேண்டி ஒட்டுமொத்த சமூகத்தினையும் பாதிக்கும் முகமாக பதிவுகளை ஆக்கங்களையும் வெளியிடுவது தவறாகும்.  சமூகத்தினை திருத்துவதற்கு பல வழிகளுண்டு அதையெல்லாம் விட்டுவிட்டு இணைய தளங்கள் மூலம் தவறு செய்தவர்களின் தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

- எனவே சமூக அக்கரை கொண்ட சமூக சீர்திருத்தவாதிகளே!  உங்களுடைய கண்களில் மாட்டியிருக்கும் சமூகம் மீதான கருப்புக் கண்ணாடியை ஒருபுரம் கழட்டிவையுங்கள்,  மாறாக சமூகத்தை கட்டியெழுப்ப ஆக்கபூர்வமாக சிந்திக்க முயற்சியுங்கள்!  எம்மை வேட்டையாட கழுகுகளும் காக்கைகளும் தயாராகவே இருக்கின்ற என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு வருங்காலங்களில்  இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்வதனை தவிர்ந்து கொள்வோம். நாளைய எதிர்காலம் நம் கையில் என்பதை மறவாதீர்!! ....                                                            
இவன் :                                      
அப்துல் பாசித்  
தென்கிழக்குபல்கலைக்கழகம் 

பல்கலைக்கழகம், அல்லது அரபிக் கல்லூரிகள் தொடர்பாக வரும் மோசமான செய்திகள்.. நம் செய்ய வேண்டியது என்ன? பல்கலைக்கழகம், அல்லது அரபிக் கல்லூரிகள் தொடர்பாக வரும்  மோசமான செய்திகள்.. நம் செய்ய வேண்டியது என்ன? Reviewed by Madawala News on 10/13/2016 11:13:00 PM Rating: 5