Accaddemy

நிந்தவூர் கடற்கரையும் இனிமேல் கதம் கதமா?



இயற்கை எப்போதும் தனக்கு பொருத்தமில்லாத விடையங்களை திணிக்கும்போது தனது கோபத்தை வெளிப்படுத்தும் என்பது ஒலுவிலில் அமையப்பெற்ற பொருத்தமில்லாத ஒரு அரசியல் துறைமுக கட்டுமானம் ஒன்றின் மூலம் எமக்கு தெரியப்படுத்தியுள்ளது .

அதன் ஒரு அங்கமாக , ஒலுவில் கடற்கரை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பும் அது சார்ந்து நடக்கும் ஈனத்தனமான அரசியலையும் சுட்டிக்காட்ட முடியும் .ஆனால் என்ன செய்வது , நடந்தது நடந்து விட்டது .

 ஆனால் இப்போது ஒலுவிலில் மேற்க்கொள்ளப்பட்ட பொருத்தமற்ற அரசியல் துறைமுக கட்டுமானத்தின் மூலம் உட்பட்ட கடலரிப்பு அதை அண்டிய ஊரான நிந்தவூரில் பரவ ஆரம்பித்துள்ளதை சமீபகாலமாக எமது கடற்கரையின் அளவில் ஏற்பட்டுள்ள பூமிச்சுருக்கத்தின் மூலம் கண்டுகொள்ள முடியும் .

இங்கு பதியப்பட்டுள்ள படங்கள் இன்று காலை சுமார் 10.30 அளவில் எடுக்கப்பட்டவை மூலம் அதை கண்டுகொள்ள முடியும் .


பொதுவாக எமது பகுதியில் ,அதுவும் எமதூரில் பல விடயங்கள் காலம் கடந்த ஞானமாகவே எமக்கு உணர்ச்சியை ஏட்படுத்துவதும் பின் அது குறித்து அங்கலாய்ப்பதும் பின் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் காணமுடியும் . இது எமது குற்றமென்று நாம் நூறுவீதம் கூறிவிட முடியாது .

உரிய அதிகாரிகள் மற்றும் மக்களின் ஆணைகளைப்பெற்றவர்களின் தூர நோக்கற்ற குறுகிய அரசியல் செயட்பாடுகளும் , சேவைகள் என்றால் கொங்கிறீட்டு பாதைகள் அமைப்பதுதான் என்ற பெரும் பிம்பத்தை ஏட்படுத்தி விட்ட அரசியலும் இவற்றுக்கு காரணம் என்று கூற முடியும் .


ஆனால் என்ன , எமது சமூகத்தில் ஒரு சிறிய வைபவம் என்றாலும் அல்லது எந்தவொரு சமூகம் சார் விடயங்களுக்கும் அரசியலும் அரசியல்வாதிகளின் பிரசன்னமும் இல்லாமல் விடுவது என்பது எதோ மரண வீடுபோல தோற்றமளிப்பதை நாம் யாரும் மறுக்க முடியாது .


இந்நிலையில் , இச்சமூகம் சார் மிகப்பெரும் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ள கடலரிப்பு விடயத்தையும் நாம் அவர்களிடமே எத்தி வைக்க
வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம் .


எமது ஊரின் கடற்கரை அரிப்பு மிகவும் சிக்கலான ஒரு நிலைக்கு வருமுன் , உரிய திணைக்களங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் விரைந்து செயட்பட வேண்டிய தருணம் இதுவென்றே நாம் கருதுகின்றோம் . அல்லாவிடில் , ஒலுவிலைப்போல , பல அரசியல்வாதிகளும் வந்து தமது அனுதாபத்தையும் , இருப்பையும் காட்டிச்ச்செல்லும் ஒரு இடமாகவே எதிர்காலத்தில் எமது கடற்கரை மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .

இது குறித்த மேலும் தகவல்கள் மற்றும் உரையாடல்கள் தொடரும் ....😣

- Athambawa Waaqir Hussain -








நிந்தவூர் கடற்கரையும் இனிமேல் கதம் கதமா? நிந்தவூர் கடற்கரையும் இனிமேல்  கதம் கதமா? Reviewed by Madawala News on 10/01/2016 07:44:00 PM Rating: 5