பராக் ஒபாமா நர­கத்­துக்குத் தான் செல்வார்.



அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா நர­கத்­துக்கு செல்­லப் ­போ­கிறார்" என பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி ரொட்­றிக்கோ டுதெர்ட் தெரி­வித்தார்.

பிலிப்­பைன்ஸின் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான போர் தொடர்பில் பராக் ஒபாமா கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தமை தொடர்பில் விமர்­ச­னத்தை வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அதே­ச­மயம் தனது நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து வரும் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் சமா­தி­ய­டைந்து நர­கத்தை நிரப்­பு­வதை தெரி­வு­ செய்­வது சிறந்­தது என அவர் கூறினார்.

அமெ­ரிக்­காவும் பிலிப்­பைன்­ஸுடன் இணைந்து இரா­ணுவப் பயிற்­சி­களை ஆரம்­பித்­துள்ள நிலையில் பிலிப்பைன்ஸ் ஜனா­தி­ப­தியின் இந்த விமர்­சனம் வெளி­யா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் அமெ­ரிக்­கா­வா­னது பிலிப்­பைன்­ஸுடன் தனது நாடு பல­மான கூட்­டு­றவைக் கொண்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.
ரொட்­றிக்கோ டுதெர்ட்டின் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான போரில் சட்­டத்­துக்குப் புறம்­பான பெரு­ம­ளவு படு­கொ­லைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் உள்­நாட்டு அதி­கா­ரிகள் மற்றும் வர்த்­தகப் பிர­மு­கர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி, போதை­வஸ்து வியா­பா­ரத்தை முறி­ய­டிப்­ப­தற்­கான பிலிப்­பைன்ஸின் தந்­தி­ரோ­பா­யங்­க­ளுக்கு அமெ­ரிக்கா கண்­டனம் தெரி­வித்­துள்­ளமை குறித்து தான் பெரிதும் ஏமாற்­ற­ம­டை­வ­தாக கூறினார்.

அமெ­ரிக்கா தனது நாட்டின் நம்­பிக்­கைக்கு உரி­ய­தல்­லாத நட்பு நாடா­க­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

“ எமக்கு உத­வு­வ­தற்கு பதில் முதலில் எமது நாட்­டுக்கு கண்­டனம் தெரி­வித்­துள்­ளீர்கள். ஆகவே திரு­வாளர் ஒபாமா, நீங்கள் நர­கத்­துக்குத் தான் போகப் போகி­றீர்கள்" என அவர் மேலும் கூறினார்.

தான் அமெ­ரிக்­கா­வு­ட­னான உறவை முறித்துக் கொண்டு ரஷ்யா மற்றும் சீனாவின் பக்கம் செல்லப்போவ­தாக அவர் எச்­ச­ரித்தார்.

அமெ­ரிக்கா பிலிப்­பைன்ஸுக்கு ஆயு­தங்­களை விற்­பனை செய்ய மறுத்­துள்­ள­தாக தெரி­வித்த அவர், தன்னால் வேறு எங்­கு­மி­ருந்து ஆயு­தங்­களை வாங்க முடியும் என சவால் விடுத்தார்.

“நீங்கள் ஆயு­தங்­களை விற்க விரும்­பா­விட்டால் நான் ரஷ்­யா­வுக்கு செல்வேன். நான் எனது இரா­ணுவ ஜென­ரல்­களை ரஷ்­யா­வுக்கு அனுப்­பி­யுள்ளேன். ரஷ்யா 'கவ­லைப்­பட வேண்டாம்.

உங்­க­ளுக்குத் தேவை­யா­னவை அனைத்தும் எம்­மிடம் உள்­ளன. அவற்றை நாம் உங்­க­ளுக்கு கொடுப்போம்' என்று தெரி­வித்­துள்­ளது" என ரொட்­றிக்கோ டுதெர்ட் தெரிவித்தார்.

அதேசமயம் சீனாவும் ஆயுதங்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அவர் கூறினார்.

லுஸன் தீவில் இடம்பெறும் 8 நாள் இராணுவப் பயிற்சியில் 1,100 அமெரிக்கப் படையினரும் 400 பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரும் பங்கேற்றுள்ளனர்.
பராக் ஒபாமா நர­கத்­துக்குத் தான் செல்வார். பராக் ஒபாமா நர­கத்­துக்குத் தான் செல்வார். Reviewed by Madawala News on 10/06/2016 09:28:00 AM Rating: 5