Free Space

அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் எம்,ஐ,எம் சபியுள்ளாஹ் முதற் தரத்தில் சித்தி.




அஷஷய்க் ஏ.சீ.எம் இம்தாத் (ஹாமி) BA

கல்முனை அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் பழைய மாணவரான நிந்தவூரைச் சேர்ந்த அஷஷய்க் எம்,ஐ,எம் சபியுள்ளாஹ்(ஹாமி) அவர்கள் இலங்கை தென் கிழக்குப்பல்கலையில் கலைமானிப் பட்டப்படிப்பில் அரபு மொழியியல் மற்றும் மொழி பெயர்ப்பு விசேட துறையில் முதற் தர சித்தி(கசைளவ உடயளள) பெற்று தனது கல்லூரிக்கும் ஊருக்கம் பெருமை சேர்த்துள்ளார்.

இத்துறையில் விசேட முதற்தர சித்தி பெற்ற அல் ஹாமியா அரபுக் கல்லூரியின் முதல் மாணவரும் இவராவார்.

இவர் எம்.ஏ இஸ்மாஈல்,எம் ஹவ்வா தம்பதியினரின் 5வது புதல்வரும் சட்டத்தரணி எம்.ஐஎம் ஐனுள்ளாஹ், ஆசிரியர் எம்.ஐ.எம் ஹிதாயதுள்ளாஹ் ஆயு அவர்களின் சகோதரரும் பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வீ அவர்களின் மைத்துனருமாவார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் கமுஃ இமாம்; ரூமி மற்றும் கமுஃ அல் மதீனா வித்தியாலயங்களிலும் கற்று பின்னர் கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரயில் 2002ம் ஆண்டு மாணவராக இணைந்து அங்கு மார்க்கக் கல்வியை கற்கத் தொடங்கினார். அங்கும் பல திறமைச் சித்திகளைப் பெற்றது மட்டுமல்லாது க.பொ.தர சாதாரன தரத்திலும் அல் ஆலிம் ஆரம்ப மற்றும் பரீட்சையிலும்; திறமைச் சித்திகளைப் பெற்றார். பின்னர் 2009ம் ஆண்டு மௌலவியாக வெளியேறி 2010ம் ஆண்டு க.பொ.உ தரத்தில் தோற்றி  இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கு கலைமானிப்பட்டப்படிப்புக்குத் தெரிவானார்.அங்கும் பருவகால பரீட்சைகளில் திறமைச் சித்திகளைப் பெற்று தற்போது இறுதி வருட விசேட கற்கையிலும் முதற் தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் இறைவனுக்கும் அல் ஹாமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.எச் ஆதம்பாவா ஆயு (மதனி) அவர்களுக்கும் தற்போதய அதிபர் அஷ;nஷய்க் யூ.எல்.ஏ கபூர் (பலாஹி) அவர்களுக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம், எம்,ஐ,எம் சபியுள்ளாஹ்  அவர்களின் உயர்வுக்காக அல்லாஹ் மேலும் அருள் புரிவானாக எனப் பிரார்திக்கின்றோம்.

அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் எம்,ஐ,எம் சபியுள்ளாஹ் முதற் தரத்தில் சித்தி. அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் எம்,ஐ,எம் சபியுள்ளாஹ் முதற் தரத்தில் சித்தி. Reviewed by Madawala News on 10/20/2016 07:55:00 PM Rating: 5