Accaddemy

எதிர் காலத்தில் இந்தியா முஸ்லீம் நாடாவதை தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகள் பெற மோடி அரசு அழைப்பு .



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று


இந்திய உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது: இந்தியாவில் இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்துக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ராமர் கோயில் கட்ட வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் ராமர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் எப்படி ராமர் கோயில் கட்ட முடியும். இந்த சமூகம் தனது மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும். முஸ்லிம்கள்  பெருகி விட்டனர் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் அதிகரித்து விட்டது எதிர் காலத்தில் இந்தியா முஸ்லிம்களின் தேசமாகிவிடும் என்பதை கருத்தில் கொண்டு பிள்ளைகளை  பெற  வேண்டும்  என வேண்டுகோள் விடுத்தார்

நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் இந்துக்களின் மக்கள் தொகை சரிவடைந்து வந்துள்ளது. தேச பிரிவினையின் போது பாகிஸ்தானில் 22 சதவீதம் இருந்த இந்துக்கள் தற்போது 1 சதவீதமாக குறைந்துள்ளனர். அப்போது இந்தியாவில் இந்துக்கள் 90 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும் இருந்தனர். ஆனால் தற்போது முஸ்லிம்கள் 24 சதவீதம், இந்துக்கள் 74 சதவீதம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எதிர் காலத்தில் இந்தியா முஸ்லீம் நாடாவதை தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகள் பெற மோடி அரசு அழைப்பு . எதிர் காலத்தில் இந்தியா முஸ்லீம் நாடாவதை தடுக்க  இந்துக்கள் அதிக குழந்தைகள் பெற மோடி அரசு அழைப்பு . Reviewed by Madawala News on 10/24/2016 09:19:00 PM Rating: 5