Accaddemy

கடும் வறட்சியால் மின் உற்பத்தி நிலைமை என்ன? மின் தடை வருமா?



(க.கம­ல­நாதன்)

நாட்டில் ஏற்­பட்­டுள்ள வரட்சி நிலை­மையை கருத்­திற்­கொண்டு அனல் மின் உற் ­பத்தி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் தடை­ யின்றி மின் விநி­யோ­கத்தை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யு­மென இலங்கை மின்­சார சபை யின் தலைவர் அனுர விஜேய­பால தெரி­வித்தார்.

அனர்த்த முகாiமைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இந்த வறட்­சியால் மக்கள் பாதிக்­க­ப­டுவர் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. கடந்த காலதில் கிடைக்­கப்­பெற்ற மழை­வீழ்ச்சி எமது மின்­தே­வைக்கு போது­மா­ன­தா­கவும் இல்லை. மே,ஜுன் மாதங்­களில் இடம்­பெற்ற வெள்ள நிலையில் சேமிக்­கப்­பட்ட நீரி மட்­டமும் குறை­வ­டைந்து வரு­கின்­றது.

சாதா­ர­ண­மாக இவ்­வா­றான காலப்­ப­கு­தியில் நீர் தட்­டுப்­பாடு ஏற்­படும். கடந்த வரு­டங்­களில் மின் வெட்டும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. அதனை கருத்­திற்­கொண்டு தற்­போது நீர் மின் நிலை­யங்­க­ளுக்கு மாறாக அனல் மின் நிலை­யங்­களை முழு­மை­யாக பயன்­ப­டுத்தி வரு­கின்றோம். அதனால் தற்­போ­துள்ள நீரை சேமிப்­ப­தையே இலக்­காக கொண்­டுள்ளோம்.

இது எமது தேவைக்கு மட்­டு­மல்ல விவ­சாய அமைச்சு, உள்­ளிட்ட பல அமைச்­சு­க­ளுக்கு பய­னுள்­ள­தாக அமையும். அதற்­காக தற்­போது ல­க்ஷ­பான நீர்த்­தே­கத்தின் நீர் சேமிக்­கப்­பட்டு வரு­கின்­றது. தற்­போது 50 அடி நீர் சேமிக்­கப்­பட்டு வரு­கின்­ற­மை­யினால் தற்­போது வரையில் பாதிப்­பில்லை. ஆனால் இவ்­வாறு நவம்பர் மாத இறுதி வரையில் பய­ணிக்­கலாம்

ஆனால் இந்­நிலை தொடர்ந்தும் நீடித்தால் பெப்­ர­வரி,மார்ச் மாதங்­களில் ஏற்­படும் நீர்த்­தட்­டுப்­பாடு அதி­க­மாக இருக்கும். இந்­நி­லையில் தற்­போது மின்­சார உற்­பத்­திக்­கான கேள்­வியும் அதி­க­ரித்­துள்­ளது. அதனை பூர்த்தி செய்­வ­தற்­கான மின்­சாரம் அனல் மின் நிலை­யங்­க­ளி­லேயே உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்து.

 அதனால் இதன் போது மக்­களும் மின் பாவ­னையை சேமித்தால் எமக்கு இல­கு­வாக இருக்கும். எதிர்­கால தேவை­களை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். கடந்த காலங்களில் போன்று மி தடை செய்யாடலிருப்பதே எமது பிரதான இலக்காகும். கடந்த காலங்களில் மின் தடைக்கு ஏதுவாக இருந்த விடயங்களிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
கடும் வறட்சியால் மின் உற்பத்தி நிலைமை என்ன? மின் தடை வருமா? கடும் வறட்சியால் மின் உற்பத்தி நிலைமை என்ன? மின் தடை வருமா? Reviewed by Madawala News on 10/13/2016 09:35:00 AM Rating: 5