Free Space

மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.. புதிய மின்வெட்டு நேர விபரம் இதுதான்.



மின் வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் காலை 8 மணி முதல் ஒரு மணித்தியாலம் மற்றும் மாலை 6 மணிக்கு பிறகு 30 நிமிடம்  மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடாளாவிய ரீதியில் காலை 8 மணி முதல் இரண்டரை மணித்தியாலங்கள் மற்றும் மாலை 6 மணிக்கு பிறகு ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு இன்று காலையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒருவார காலத்துக்கு இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்னுற்பத்தியில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இந்த மின்வெட்டுஅமுல்படுத்தப்படுகின்றது.
மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.. புதிய மின்வெட்டு நேர விபரம் இதுதான். மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.. புதிய மின்வெட்டு நேர விபரம் இதுதான். Reviewed by Madawala News on 10/17/2016 04:02:00 PM Rating: 5