Free Space

பதுளை மாவட்டமெங்கும் மழை தேடித் தொழுகை... பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொண்டனர்.



நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வரட்சி நிலைமையினைக் கருத்திற் கொண்டு ஜம்இய்யதுல் உலமா பதுளைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஸலாதுல் இஸ்திஸ்கா” மழை தேடித் தொழும்  தொழுகை கடந்த 12/10/2016 புதன்கிழமை காலை பதுளுபிட்டிய முஜாஹிதீன் பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இத்தொழுகையில் பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொண்டிருதனர்.

கடந்த 2/10/2016 அன்று பதுளை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற பதுளை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபைக் கூட்டத்தில், மாவட்டமெங்கும் இந்த மழை தேடித் தொழும் தொழுகைகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டுமென்ற வகையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மேற்படி தொழுகைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த அதேவேளை, இதன் அடுத்த கட்டமாக பொரகஸ், சில்மியாபுர அல்-முர்ஷித் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையிலுள்ள தோட்டத்தில் எதிர்வரும் 16/10/2016 ஞாயிற்றுக்கிழமை காலை மழை தேடித் தொழும் தொழுகை பெறவுள்ளதாகவும் இதில் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும்  ஜம்இய்யதுல் உலமா பொரகஸ் கிளை மற்றும் சில்மியாபுர இளைஞர் கழகம் என்பன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.

மேலும் இக்குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் மழை பெய்தால் இந்நிகழ்வு இடம்பெற மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- எம். ஏ.சி. எம். முனவ்வர், பதுளை.
பதுளை மாவட்டமெங்கும் மழை தேடித் தொழுகை... பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொண்டனர். பதுளை மாவட்டமெங்கும் மழை தேடித் தொழுகை...  பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொண்டனர். Reviewed by Madawala News on 10/12/2016 02:36:00 PM Rating: 5