அதி­காலை ஒரு மணி­வரை நீடித்த மைத்­திரி - ரணில் பேச்­சு­வார்த்தை.



ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுக்கும் இடையில் கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை வெள்ளிக்­கி­ழமை  அதி­காலை ஒரு மணி­வரை நீடித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த சந்­திப்­பின்­போது கடந்த புதன்­கி­ழமை ஜனா­தி­பதி ஆற்­றிய உரை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த சர்ச்சை மற்றும் அதன் பின்னர் ஏற்­பட்ட சர்ச்­சைகள் குறித்து ஆரா­யப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் தனக்கு சில விட­யங்கள் அறி­விக்­கப்­ப­டாமை தொடர்­பி­லேயே தான் அதி­ருப்தி வெளி­யிட்­ட­தா­கவும் உரையின் இறு­தியில் தற்­போ­தைய அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு இட­ம­ளிக்­க­மாட்டேன் என்றும் குறிப்­பிட்­ட­தா­கவும் ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.

இதே­வேளை தற்­போது எழுந்­துள்­ள­தாக கரு­தப்­படும் நெருக்­கடி நிலை­மைக்கு தீர்வு காண்­பது தொடர்­பா­கவும் இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை கடந்த புதன்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரைாற்­று­வ­தற்கு முன்­ப­தாக செவ்­வாய்க்­கி­ழமை ஒரு சந்­திப்பை முக்­கிய அமைச்­சர்­க­ளுடன் நடத்­தி­யி­ருந்தார். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் வாராந்த அமைச்­ச­ரவை கூட்­டத்தின் பின்னர் இந்த சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சந்­திப்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் அமைச்­சர்­க­ளான துமிந்த திசா­நா­யக்க மஹிந்த சம­ர­சிங்க எஸ்.பி. திசா­நா­யக்க நிமால் சிறி­பால டி. சில்வா மஹிந்த அம­ர­வீர மற்றும் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா ஆகியோர் பங்­கேற்­றனர்.

மறுபுறம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர்களான மங்கள சமரவீர விஜேதாச ராஜபக்ஷ நவீன் திசாநாயக்க சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதி­காலை ஒரு மணி­வரை நீடித்த மைத்­திரி - ரணில் பேச்­சு­வார்த்தை. அதி­காலை ஒரு மணி­வரை நீடித்த மைத்­திரி - ரணில் பேச்­சு­வார்த்தை. Reviewed by Madawala News on 10/17/2016 08:46:00 AM Rating: 5