Accaddemy

சமூக வலைத்தளங்களில் போலி நிதியமைச்சர்.



நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் போலியான முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் கணக்குகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பெயரில் சமூக வலைத்தளங்களில் வலம்வரும் மர்மநபரைப் பற்றி நிதி அமைச்சர் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

முகப்புத்தகத்தில் “Ravi Karunanayake Lanka Intelligence” என்ற பெயரிலும், டுவிட்டரில் “@RavikOfficial” என்ற பெயரிலும் இயங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை பிரதிநிதித்துவப்படுத்துவது போன்று போலியான முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவருடைய பெயரை பயன்படுத்தி மூன்றாம் நபர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் கணக்குகள் உருவாக்குவது தவறான விடயமாகும் எனவும் அறிவித்துள்ளார்.

பிரபலமானவர்களுடைய பெயரில் இவ்வாறு போலி கணக்குகல் இயங்குவதால் பல பிரச்சினைகள் உருவாகுவதற்கு காரணமாகிவிடும். அதிலும் ரவி கருணாநாயக்க நாட்டின் நிதி அமைச்சர் என்ற பதவியில் இருக்கின்றார்.

இதுபோன்ற பல சம்பவங்கள் நாட்டில் இடம்பெறத்தான் செய்கின்றன. அண்மையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரிலும் போலி முகப்புத்தகக் கணக்கு ஒன்றை உருவாக்கி பல மோசடிகளை செய்த நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் போலி நிதியமைச்சர். சமூக வலைத்தளங்களில் போலி நிதியமைச்சர். Reviewed by Madawala News on 10/13/2016 01:53:00 PM Rating: 5