Free Space

அரச வங்கி கொள்ளை.. மேனேஜரும் களத்தில். #இலங்கை



வென்னப்புவ பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் கொள்ளையிடத் திட்டமிட்ட குறித்த வங்கியின் முகாமையாளர் உள்ளிட்ட ஐவர் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை வென்னப்புவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், தனது வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் இனந்தெரியாத நபர்களால் உடைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது என்று, வங்கியின் முகாமையாளரால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதன் பின்னரே, குறித்த வங்கியின் முகாமையாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். பாரிய கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள குறித்த வங்கி முகாமையாளர், தன்னுடைய கடனிலிருந்து விடுபடுவதற்காகவே இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அரச வங்கி கொள்ளை.. மேனேஜரும் களத்தில். #இலங்கை அரச வங்கி கொள்ளை.. மேனேஜரும் களத்தில். #இலங்கை Reviewed by Madawala News on 10/03/2016 02:25:00 PM Rating: 5