Ad Space Available here

அமெரிக்க தேர்தல் வரும்போதெல்லாம் வெடிக்கின்ற பார்மாவின் வன்முறைகள்.பர்மாவில் மீண்டும் பற்றி எரியத்தொடங்கி உள்ளது. ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு எதிரான நெருப்பு .

நேற்றைய தினம் மௌங் டாவ் பகுதியில் அதினா பாரா பகுதியில் ஜும்மா தொழுகைக்கு சென்ற முஸ்லிம்கள் மீது இராணுவம் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியதால் யாருமே அங்கே ஜூம் ஆ தொழுகைக்கு செல்லவில்லை .
இம்மாதம் 19 ஆம் திகதி உஷின் கயா என்கிற கிராமத்துக்குள் அங்குள்ள முஸ்லிம்களின் உடமைகளை தீ வைத்து நாசமாக்கிய பின்னர் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் 10 முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவுப்படுத்தி உளளனர்  . வல்லுறவுப்படுத்த பட்டவர்களில் இருவர் 15 வயதேயான சிறுமிகளும்  ஒரு 17 வயதான சிறுமியும் உள்ளடங்குகிறார்கள்
என்பது கவலைக்குரிய மிகவும்  விடயம் .

பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் பல வீடுகள் ,பள்ளிவாசல்கள் முஸ்லீங்களுக்கு சொந்தமான வியாபார ஸ்தலங்கள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன . மொத்தத்தில் அமைதியாக இன்னொரு இனச்சுத்திகரிப்பு ஒன்று அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது . பிரதான சர்வதேச மீடியாக்கள் இந்த விஷயத்தை தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் ராகிண் மாகாணத்தில் பங்களாதேசத்தோடு எல்லையை கொண்ட பகுதியில் மியன்மார் எல்லை காவல் படைகள்  மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதை அடுத்து  ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கெடுபிடிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக அங்கு  கூறப்படுகிறது . ஆனால் ரோஹாங்கியங்கள் மீது அதற்கு  முன்னே இருந்து தாக்குதல் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சார்பான செய்திகள் தெரிவிக்கின்றன .

2012 யிலும் வன்முறைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் இதே போன்ற சிறிய காரணமே  கூறப்பட்டது

பர்மாவின் பாயங்கரவாத பௌத்த பிக்கு    அசின் விராது பேஸ் புக் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டிக்கொண்டு இருக்கின்றான்.

பர்மாவின் ஐனநாயக ரீதியாக  தெரிவுசெய்யப்பட்ட ஆங் சான் சுகி அரசாங்கம் இந்த வன்முறைகளை கண்டும் காணாமல் உள்ளதால் தேசியவாத பௌத்த  பிக்குகளுக்கும் ,தேசியவாத கடும்போக்கு அமைப்பாக மா பா தா வுக்கும் அதனோடு தொடர்புடைய தவுங் டான் இளைஞர் அமைப்புக்கும் வன்முறைக்கு பச்சைக்கொடி காட்டியது போல அக்கிரமங்களை அவை
கட்டவிழ்த்து விட்டுள்ளன .  இந்த வன்முறைகளுக்கு பர்மீய இராணுவம் உடந்தையாக நின்று கொண்டு சட்டத்தை கையில் எடுத்து கொலைகளுக்கும் , கொள்ளை களுக்கும் , தீ வைப்புக்களுக்கும் துணை போய்க்கொண்டு இருகின்றது .


தவுங் டான் என்கிற கிராமத்தின் நுழைவாயிலில்  'முஸ்லிம்களுக்கு இங்கே வரவோ தங்கவோ, திருமணம் செய்யவோ, வியாபாரம் செய்யவோ
அனுமதி இல்லை' என்று  மஞ்சள் நிறத்தில் போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகை அங்குள்ள மக்களின் உள்ளங்களில் புரையோடிப்போன வெறுப்பை வெளிக்காட்டுகிறது

கடந்த தடவை பாரிய அளவில்  வன்முறை வெடித்தது 2012 ஆம் ஆண்டு இதே அக்டோபர் இல் . அதாவது அமெரிக்க தேர்தல் நடைபெறுகிற நவம்பர் மாதத்துக்கு முன்னரான காலப்பகுதியில் என்பது குறிப்பிடதக்கது . அவ்வாறே அடுத்த மாதம் அமெரிக்காவில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில்  இம்முறையும் பாரிய அளவான வன்முறை  அங்கே
வெடித்துள்ளது .

தேர்தல் பிஸியில் இது போன்ற இனஅழிப்பை அமெரிக்கா கண்டுகொள்ளாது என்கிற நப்பாசையாக கூட இது இருக்கலாம் . உண்மையில் அமெரிக்காவுக்கு   இது போன்ற இன அழிப்பை விட பொருளதார ரீதியாக  பர்மா வில் உள்ள சந்தர்ப்பங்களே மிகவும் முக்கியமானதால் இதையெல்லாம் கண்டு அலட்டிக்கொள்ளப் போவதில்லை .


எங்கெல்லாம்  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழித்து விடப்படுகிறது அங்கெல்லாமே சியோனிச சக்திகளின் பின்னணி இருப்பதை வரலாறு பறைசாற்றும் .

பர்மாவுக்கு இஸ்ரேலுக்கும் இடையில மிகவும் நெருங்கிய இராஜதந்திர தொடர்பு உள்ளது . 1953 இல் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் உருவான போதும் ஜனநாயக ரிதியான அரசு அமைக்கப்பட்ட பின்னர் தொடர்புகள் மிகவும் நெருக்கமடைந்தன . விசேடமாகாக விவசாய தொழிநுட்ப துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு பேணப்பட்டு வருகின்றது


"இஸ்ரேலுக்கும் பர்மாவுக்கும் இடையே நல்ல தோழமையான உறவு உள்ளது எதிர்காலத்தில இந்த தொடர்பு மேலும் வலுவடையும் " கூறியது வேறு யாரும் அல்ல, சமீபத்தில் பர்மா வில் உள்ள உள்ளூர் செய்தித்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போதைய இஸ்ரேலிய தூதுவர் டானியல் சன்சைன் .
பர்மாவில் எப்போதெல்லாம் வன்முறை வெடிக்கிறதோ அதன் சங்கிலி தொடர் பாதிப்பு பௌத்த நாடான இலங்கையிலும் இருந்து வந்துள்ளது .இவ்வாறான பிரச்சனைகள் தொடராமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் .

சிரியாவைப்போல அநாதரவாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பர்மாவின் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்க்காக ஒவ்வொரு தொழுகைகளில் அல்லாஹ்விடம் கையேந்தி பிரார்த்திப்போமாக ..

-முஹம்மது ராஜி
அமெரிக்க தேர்தல் வரும்போதெல்லாம் வெடிக்கின்ற பார்மாவின் வன்முறைகள். அமெரிக்க தேர்தல் வரும்போதெல்லாம்  வெடிக்கின்ற பார்மாவின் வன்முறைகள். Reviewed by Madawala News on 10/22/2016 04:20:00 PM Rating: 5