கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களின் சிறுவர் நிகழ்ச்சி.



கனடா வன்கூவரில் இயங்கும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLIF அமைப்பின்  ஒன்றுகூடலும் சிறுவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் புற நகரான பெர்னபியிலுள்ள ரோயல் பெலஸ் வரவேற்பு மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இது பற்றி மேலும் அறியவருவதாவது  

ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு பிரிடிஷ்கொலம்பியா இலங்கை முஸ்லிம் அமைப்பு SLIF நடத்திய சிறுவர்களுக்கான கிராத் போட்டியின் பரிசளிப்பு விழாவும் ஒன்றுகூடலும் அக்டோபர் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்கூறப்பட்ட மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் பெருமளவு இலங்கை முஸ்லிம் குடும்பங்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதில் இலங்கையர் அல்லாத நடுவரால் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

- zacky junaid -
கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களின் சிறுவர் நிகழ்ச்சி. கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களின் சிறுவர் நிகழ்ச்சி. Reviewed by Madawala News on 10/11/2016 07:47:00 PM Rating: 5