Free Space

இன்றைய தினம் இந்த ஊர் ஒரு சிறந்த மனிதனை இழந்து விட்டது...




                   
இன்றைய தினம்  இந்த ஊர் ஒரு சிறந்த மனிதனை இழந்து விட்டது... (27.10.2016)

அவர் யார் மனதையும் புண் படுத்தாத ஒருவர்...

எவருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் நிதானமாக அதற்கு சிறந்த ஆலோசனை வழங்கக் கூடியவர்...

வயதெல்லை இன்றி எல்லோருடனும் மிகவும் அன்பாக பழகியவர்...

எழும் இளம் பயிர்களுக்கு கை கொடுத்து அவர்களை ஊக்கவித்து பாராட்டி அவர்களை வாடவிடாமல் வளர்கக்கூடிய ஒருவர்...

சமூக சேவைக்காக பாடு பட்ட ஒருவர்....

சிறியவர் பெரியவர் என்று வயதெல்லை இன்றி அவரின் சிறந்த குணத்தால் எல்லோரின் மனதையும் வென்ற ஒரு சிறந்த மனிதர்...

அவரின் முகத்தில் நான் அதிகம் கண்டது அவரின் அன்பான பணிவான சிரிப்பு தான்.இப்போது என் கண்ணீர் துளிகளுக்கு மத்தியில் அவரின் அந்த சிரிப்புதான் தெரிகிறது....

அவர் தான் எல்லோரின் மனதையும் வென்ற எங்கள் சகோதரர் ரமீஸ் நானா..
இன்று எங்களை விட்டுப் பிரிந்து நீண்ட பயணத்துக்காக சென்று விட்டார் அவரின் பயணம் வெற்றி பயணமாக அமைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்......

அல்லாஹ் தாயை விட 70 மடங்கு இறக்கம் உள்ளவன் அவனுக்கு தெரியும் ஒரு அடியனுக்கு எது சிறந்தது என்று... அவருக்காக எமது ஒவ்வரு தொழுகையிலும் சுஜூதில் துஆ கேட்போம்... எல்லாத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்.

இந்த உலகத்தில் எவரும் இருக்க பிறக்கவில்லை எல்லோரும் இறக்க பிறந்தவர்கள் தான். இருக்கும்வரை எல்லோருடனும் இரக்கத்தோடு இருப்போம்...

ரமீஸ் நானா.. சம்பாதித்த நன்மைகளும்,எல்லா நல்லுள்ளங்களின் துஆ வும் என்றும் உங்களுக்காக இருக்கும் இன்ஷால்லாஹ்......

கூடப்பிறவா சகோதரன்  : முகம்மத் சிபான்.

( கட்டாரில்  தொழில் புரிந்து வந்த முகம்மத் ரமீஸ் கடந்த   சில தினங்களாக சுகயீனமடைந்து  இருந்த நிலையில் இன்று ஹமாத் வைத்தியசாலையில் வபாத் தானார். சில வருடங்களுக்கு முன்னர் திருமணமான நிலையில் ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆவார்.
இன்றைய தினம் இந்த ஊர் ஒரு சிறந்த மனிதனை இழந்து விட்டது... இன்றைய தினம்  இந்த ஊர் ஒரு சிறந்த மனிதனை இழந்து விட்டது... Reviewed by Madawala News on 10/27/2016 02:26:00 PM Rating: 5