Ad Space avaiable

நம்நாட்டு பாவப்பட்ட ஜீவன்களின் சோகக் கதை இது. (:



- முஜீப் இப்ராஹீம் -

இத்தனை பெரிய போராட்டங்களுக்கு பின்னர் தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 610 ரூபாவிலிருந்து 730 ரூபாவாக உயர்த்துவதற்கு தொழிற்சங்கங்கள் இணங்கியுள்ளதாக அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

அதிகாலை நான்கு மணிக்கே மலையிலிருந்து இறங்கி நடந்து, தேயிலை தொழிற்சாலைகளில் வரவு பதிந்து, கொழுந்து பறிக்கும் கூடையினை முதுகில் சுமந்து தோட்டத்திற்குள் இறங்கும் போது ஏழெட்டு மணியாகும்.

பகலெல்லாம் வெயிலிலும், பனியிலும் அடிபட்டு பறித்த கொழுந்தை பத்திரமாய் கொண்டு சேர்த்து, அதை எடை போடும் வரை கால்கடுக்க வரிசையில் காத்து நின்று, மீண்டும் லயத்துக்கு சென்று சேரும் போது இரவு ஏழெட்டுமணியாகும்.

இதன் பிறகு குடித்துவிட்டு வந்து உழல்கிற கணவன், பாதிப்பசியோடு உறங்கும் குழந்தைகள், மழைபெய்தால் ஒழுகும் கூரை, அது அதிகம் பெய்தால் மண்ணுக்குள் புதைந்து போகும் வாழ்க்கை என்று வாழுகிற இந்த ஜீவன்களுக்கு நாளொன்றுக்கு 120 ரூபாவினை சம்பளமாக அதிகரித்துக்கொள்ள நாய் படாதபாடு படவேண்டியிருக்கிறது.

இவர்களை வைத்து அரசியல் செய்து சுகபோக வாழ்வு வாழ்கிறவர்கள் தேர்தல் காலங்களில் மிக குறைந்த விலைக்கு அவர்களது வாக்குகளையும் கொள்ளையிட்டு விடுகின்றனர்.

நாளொன்றிற்கு 1000 ரூபா செலுத்தினாலும் போதாத நிலையில் கடுமையாக உழைக்கும் இந்த தொழிலாளர் வர்க்கம் வாழ்ந்துவருகிறது.

இந்த பாவப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்து அண்மையில் எம்.பி ஆகி பின்னர் மந்திரியாகிய ஒருவரை கொழும்பு ஹில்டனில் காணக்கிடைத்தது.

ஐந்து நட்சத்திர மதுபானச்சாலையில் அவர் வயிறுமுட்ட குடித்துக்கொண்டிருந்தார்.

அந்த இரவு பல குழந்தைகள் லயன் அறைகளில் தண்ணீரை மட்டும் இரவுச்சாப்பாடாக குடித்துவிட்டு உறங்கி இருக்க கூடும்.
நம்நாட்டு பாவப்பட்ட ஜீவன்களின் சோகக் கதை இது. (: நம்நாட்டு பாவப்பட்ட ஜீவன்களின் சோகக் கதை இது. (: Reviewed by Madawala News on 10/05/2016 11:58:00 PM Rating: 5