Free Space

சிறுகதை என்கிற பெயரில் இஸ்லாத்தை கொச்சை படுத்தும் சல்மா (ருக்கையா பேகம்). தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பார்ப்பன ஊடகங்கள்.



சல்மாவை பார்ப்பன பத்திரிக்கைகள் கொண்டாடும் காரணம் என்ன?

-வலையுகம் ஹைதர் அலி -

இந்திய சூழலில்  முஸ்லிம் ஒருவர்  பொது ஜனரஞ்சக பத்திரிக்கைகளால், ஊடகங்களால் கொண்டாடப் பட வேண்டுமெனில்,
ஒன்று அவருக்கும் இஸ்லாத்திற்க்கும் சுத்தமாக சம்மந்தம் இருக்கக் கூடாது.

அல்லது அவர் இஸ்லாத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவாரக இருக்க வேண்டும்.

இது எழுதப் படாத பொதுவிதி அப்படியிருந்தால் உங்கள் முகத்திற்க்கு முன் ஆயிரம் சானல்களின் மைக்குகள் நீளும்.

உதாரணம் இந்த ராஜாத்தி சல்மா என்கிற ருக்கையா பேகம்.

சிறுகதை என்கிற பெயரில் இஸ்லாத்தை கொச்சைப் படுத்துவதே இவரின் தொழில்.

காலச்சுவடு சஞ்சிகையில்  வந்த சல்மாவின் சாபம் என்கிற சிறுகதை வசித்திருந்தால் உங்களுக்கும்  புரியும்.

திருமணமாகாத ஒரு ஏழை முஸ்லிம் பெண்ணின் மண உணர்வுகளாக விரியும் இக்கதை டக்குனு தடம் மாறும்.

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஒவ்வொருவராகப் பைத்தியம் பிடித்து அழியும் கதை இது.

அழிவதற்கு ஒரு சாபம் காரணமாக இருக்கிறது. ஒரு பார்ப்பனக் கணவன், மனைவி, அவர்களின் சிறு குழந்தை ஆகியவர்களை அந்த இஸ்லாமிய குடும்பத் தலைவர் நகைக்காகக் கொலை செய்து கிணற்றில் போட்டு விடுகிறார். மோதிரத்திற்காகக் குழந்தையின் பிஞ்சு விரலை வெட்டுகிற முஸ்லிம் அவர். பார்ப்பனக் குடும்பத்தின் சாபத்தால் இன்று அந்த முஸ்லிம் குடும்பம் அழிகிறது என்பதுதான் கதை.


முஸ்லிம்களின் இன்றைய அவலங்களுக்கெல்லாம் அன்று முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்துக்களுக்குச் செய்த கொடுமைகள்தான் காரணம் என்கிற இந்துத்துவக் கருத்தியலுக்கு நன்றாக எண்ணெய் ஊற்றி உள்ளார்  அடித்தார் சல்மா.

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்கிற மோடி இக்கதையை வாசித்திருந்தால் குஜராத்தி மொழியில் பெயர்த்து வெளியீட வாய்ப்பிருக்கிறது.


சல்மான் ருஷ்தி, தஸ்லிமா வரிசையில்  இதுபோன்ற இஸ்லாம் அறியாத எழுத்தாளர்களை கொண்டு தலாக் சம்மந்தமான கட்டுரைகளை பார்ப்பன பத்திரிக்கைகள் பிரசுரிக்கும் உள்நோக்கத்தை நாம் சரியாக புரிந்து கொண்டு தீய சக்திகளை தனிமைப் படுத்தி எதிர்த்து போராட வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்!

சிறுகதை என்கிற பெயரில் இஸ்லாத்தை கொச்சை படுத்தும் சல்மா (ருக்கையா பேகம்). தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பார்ப்பன ஊடகங்கள். சிறுகதை என்கிற பெயரில் இஸ்லாத்தை கொச்சை படுத்தும் சல்மா (ருக்கையா பேகம்). தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பார்ப்பன ஊடகங்கள். Reviewed by Madawala News on 10/25/2016 01:44:00 PM Rating: 5