Free Space

மடவளை நியுஸில் வெளியான செய்திக்கு தமிழக எழுத்தாளா் சல்மாவின் பதில்.



இந்தியா-  தமிழ் நாடு  எழுத்தாளர் சல்மா,  மூத்த  ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமத் அவர்களுக்கு   முகநூல் வழியாக அனுப்பிய செய்தி...

மடவளை நியுஸில் என்னை பற்றி வெளியான செய்தியை வாசித்தேன்.

(செய்தி லிங்க்:  http://www.madawalanews.com/2016/10/Salma.html )

நான் மோடியின் மதவாத அரசியலுக்கு எதிரானவள்.எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின்பால் நிற்பவள்.

பிஜேபி முன் எடுக்கும் மனித விரோத செயல்களையும்,அவர்கள் மதத்தின் பேரால் நடத்தும் சுரண்டல்களையும் கடுமையாக கண்டனம் செய்யக்கூடியவள்.

இந்த எனது மனத்தெளிவும் போராட்ட குணமும் எம் தந்தை பெரியாரிடம் இருந்து பெற்றவை.

என்னை அறியாத மனிதர்களது தூற்றுதல்களை பொருட்படுத்தப் போவதில்லை.

இன்னும் கூட என்னை பற்றி உங்களுக்கு குழப்பம் மிச்சமிருப்பதை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர ஒன்றுமில்லை.
மடவளை நியுஸில் வெளியான செய்திக்கு தமிழக எழுத்தாளா் சல்மாவின் பதில். மடவளை நியுஸில் வெளியான செய்திக்கு தமிழக எழுத்தாளா் சல்மாவின் பதில். Reviewed by Madawala News on 10/27/2016 09:34:00 PM Rating: 5