Kidny

Kidny

லசந்தவை கொன்றதாக தற்கொலை செய்த புலனாய்வு வீரரின் தொலை­பேசி இலக்கம் ஊடாக மேலதிக தகவல்கள்..(எம்.எப்.எம்.பஸீர்)

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவை தானே கொலை செய்­த­தாக கடிதம் ஒன்­றினை எழுதி வைத்­து­விட்டு தற்­கொலை செய்­து­கொண்ட இர­ணு­வத்தின் சார்ஜன் மேஜர் தர ஓய்­வு­பெற்ற இரா­ணுவ புலனாய்வு வீரரின் கைய­டக்கத் தொலை­பேசி இலக்கம் ஊடாக மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­கான மிக முக்­கி­ய­மான தக­வல்கள் சில குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

அவர் நெருங்கிப் பழ­கிய மற்றும் தொடர்­பு­களைப் பேணிய நபர்கள் தொடர்­பி­லான தக­வல்­களை மையப்­ப­டுத்­தியே இந்த சந்­தே­கிக்­கத்­தக்க விசா­ரணைக் குரிய தக­வல்­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு கண்­ட­றிந்­துள்­ளது. இந் நிலையில் அந்த தக­வல்­களை மையப்­ப­டுத்தி குற்றப் புல­னாய்வுப் பிரிவும் தேசிய உளவுப் பிரிவும் தனித்­த­னி­யான சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

குறித்த இரா­ணுவ சார்ஜன் மேஜர் தற்­கொலை செய்­து­கொள்­வ­தற்கு இரு தினங்­க­ளுக்கு முன்னர் அதா­வது, கடந்த 11 ஆம் திகதி கேகா­லையில் இருந்து கொழும்­புக்கு வந்­துள்ள நிலையில் மீள வீட்­டுக்கு இரவு 7.00 மணி­ய­ள­வி­லேயெ திரும்­பி­யுள்ளார். இந் நிலையில் கொழும்பில் அவர் சந்­தித்­த­வர்கள் யார், எதற்­காக சந்­தித்தார், எங்கு தங்­கி­யி­ருந்தார் உள்­ளிட்ட விட­யங்­களை மையப்­ப­டுத்தி புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

 கேகா­லையில் தங்­கி­யி­ருந்­த­வாறு குற்றப் புல­னாய்வுப் பிரிவு, தேசிய உளவுப் பிரிவு, பொலிஸ் விஷேட நட­வ­டிக்கை பிரிவு ஆகி­ய­வற்றின் தலா ஒவ்­வொரு குழுக்­களும் கேகாலை சிரேஷ்ட பொலிச் அத்­தி­யட்­சரின் கீழ் விஷேட பொலிஸ் அணி­யொன்ரும் விசா­ர­ணை­களை தொடர்­கின்­றன. இதற்கு மேல­தி­க­மா­கவே கொழும்பில் பிரத்­தி­யேக விசா­ரணைக் குழுக்கள் கலத்தில் இறக்­கப்ப்ட்­டுள்­ளன.

 54 வய­தான ஓய்­வு­பெற்ற புல­னாய்வு சார்ஜன் மேஜ­ருக்கு ஏதேனும் அழுத்­தங்கள் அச்­சு­றுத்­தல்கள் வந்­ததா எனவும், அவர் கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ள மலிந்த உட­லா­கம என்­பவர் யார் என்­பது குறுத்தும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இத­னை­விட தற்­கொலை செய்­து­கொண்ட இரா­ணுவ மேஜரின் மகன் மரண பரி­சோ­த­னை­களின் போது வழங்­கிய சாட்­சியில், கடி­தத்தின் கையெ­ழுத்து, தனது அப்­பா­வி­னு­டை­யது என குறிப்­பிட்­டுள்ள நிலையில் அது குறித்தும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

தற்­கொலை செய்­து­கொண்ட எதி­ரி­சிங்க ஜய­மான்ன என்ற குறித்த இரா­ணுவ வீரரின் பெய­ருக்கு பதி­லாக போலி பெயரில் அவர் இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து ஓய்­வூ­திய பணத்­துக்கு மேல­தி­க­மாக இர­க­சிய கணக்கில் இருந்து பணம் பெற்று வந்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்­பிலும் தற்­கொ­லைக்கு முன்­னைய வாரங்­களில் தொடர்ச்­சியாக் இரா­ணுவ முகாம்­க­ளுக்கு சென்று பலரை சந்­தித்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்­பிலும் விசா­ர­ணை­யா­ளர்கள் கவனம் செலுத்­தி­யுள்­ளனர்.

 இது குறித்து பிர­தான விசா­ர­ணையை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி ;பொலிஸ் அத்தியட்சர் திசேரா, பொலிஸ் பரிசோதகர்களான நிஸாந்த சில்வா, சுதத் குமார ஆகியோரின் கீழான பொலிச் குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லசந்தவை கொன்றதாக தற்கொலை செய்த புலனாய்வு வீரரின் தொலை­பேசி இலக்கம் ஊடாக மேலதிக தகவல்கள்.. லசந்தவை கொன்றதாக தற்கொலை செய்த புலனாய்வு வீரரின்  தொலை­பேசி இலக்கம் ஊடாக மேலதிக தகவல்கள்.. Reviewed by Madawala News on 10/19/2016 10:15:00 AM Rating: 5