Accaddemy

விக்­னேஸ்­வரனுக்கு இரா­ணுவ பாது­காப்பு வழங்க நாங்கள் தயார். பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன அறிவிப்பு.



அர­சியல் தலை­மை­க­ளுக்கு இரா­ணுவ பாது­காப்பு வழங்­கப்­படக் கூடாது என்ற கட்­டாயம் உள்­ளது. எனினும் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாயின் அவ­ருக்­கான சிவில் பாது­காப்பில் திருப்தி இல்­லை­யெனின் இரா­ணுவ பாது­காப்பை வழங்க தயார் என இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

அர­சியல் நகர்­வு­க­ளுக்­காக பாது­காப்பு விட­யங்­களை பக­டைக்­காய்­க­ளாக பயன்­ப­டுத்­தக்­கூ­டாது எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

விக்­கி­னேஸ்­வ­ரனின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் உள்­ள­தாக வட­மா­காண உறுப்­பி­னர்­களும் விக்­கி­னேஸ்­வரனும் தெரி­வித்­துள்ள நிலையில் அவ­ருக்­கான பாது­காப்பு அச்­சு­றுத்தல் மற்றும் பாது­காப்பு தொடர்பில் வின­விய போதே இரா­ணுவ ஊட­கப்­பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு பாது­காப்பு அச்­சு­றுத்­தல்கள் இருப்ப­தாக புல­னாய்வு தக­வல்கள் தெரி­விக்­க­வில்லை. அத்­துடன் அவ­ருக்கு சிவில் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே அவர் பாது­காப்­பாக உள்ளார் என தெளி­வாக நம்ப முடியும்.

மேலும் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளுக்கு இரா­ணுவ பாது­காப்பு வழங்­கப்­ப­ட­மாட்­டாது. கடந்த காலங்­களில் முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஆகி­யோரின் பாது­காப்பு விட­யங்­க­ளிலும் கூட இரா­ணுவ பாது­காப்பு நீக்­கப்­பட வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

 அவ்­வாறு இருக்­கையில் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு இரா­ணுவ பாது­காப்பு அவ­சி­ய­மாக கருத முடி­யாது. அவ­ருக்­கான சிவில் பாது­காப்பை மேலும் அதி­க­ரித்­துக்­கொள்ள முடியும்.

எனினும் அவ­ருக்கு இரா­ணுவ பாது­காப்பு அல்­லது இரா­ணு­வத்தின் ஏதேனும் உத­விகள் தேவைப்­ப­டு­மாயின் அதனை தயங்­காது வழங்க நாம் தயா­ராக உள்ளோம். அவ­ருக்கு எந்த நேரத்­திலும் இரா­ணுவம் உதவத் தயா­ராக உள்­ளது.

வடக்கில் இரா­ணுவ பிர­சன்னம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. அதபோல் முகாம்­களும் குறைக்­கப்­பட்­டுள்­ளன. அர­சியல் விட­யங்­களில் இரா­ணுவம் தலை­யி­டாது. எனினும் பாது­காப்பு விவ­கா­ரங்­களில் தேவைப்­படின் நாம் உத­வி­களை வழங்க தயா­ராக உள்ளோம்.


வடக்கில் மக்கள் மத்­தியில் குழப்­ப­க­ர­மான சூழல் நில­வு­வ­தா­கவோ அல்­லது சிங்­கள – தமிழ் மக்களிடையே முரண்­பா­டுகள் ஏற்படுவதாகவோ பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை. அரசியல் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள் எவ்வாறு இருக்கின்றன என நாம் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் பாதுகாப்பு விடயத்தில் சிக்கல்கள் இல்லை என்றார்.

விக்­னேஸ்­வரனுக்கு இரா­ணுவ பாது­காப்பு வழங்க நாங்கள் தயார். பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன அறிவிப்பு. விக்­னேஸ்­வரனுக்கு இரா­ணுவ பாது­காப்பு வழங்க நாங்கள் தயார். பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரத்ன அறிவிப்பு. Reviewed by Madawala News on 10/04/2016 10:24:00 AM Rating: 5