Kidny

Kidny

இலங்கை முஸ்லிம்களின் வடகிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பின் மத்தியில் இலங்கையில் சிவ சேனா ????சிறும்பான்மை சமூகங்களுக்கு எதிரான இனவாத ,மதவாத சிந்தனைகளின் ஊடாக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றல் , அதனை தக்கவைத்துக் கொள்ளல் எனும் இலக்கை அடைந்துள்ள இந்திய  ஆளும் அரசாங்கம்.  
இந்திய சுதந்திர தந்தை மகாத்மா காந்தியை , ஆர் எஸ் எஸ் தொண்டர் நாதுராம் கோட்சே எனும் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப் பட்ட வரலாற்றின் அசிங்கத்தை “ தேசியப் பற்று” என்று பகிரங்கமாக ஊடகங்களில் கருத்துக் கூறும் தற்போதைய பி ஜே பி ,ஆர் எஸ் எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அரச ஆதரவு இயக்கங்களின் இனவன்முறை கெடுபிடிகள்.  
 குஜராத் மாநில அரசியலிலிருந்து இந்தியப் பிரதமர் பதவிவரை வன்முறை அரசியலையே மூலதனமாகக் கொண்டு செயற்படும் மோடியின் தலைமையிலான  தற்போதைய இந்திய ஆளும் பி ஜே பி அரசாங்கம்.
பார்பனிய சிந்தனைகளை அடியொட்டி  வர்ணாசிரம கொள்கையை கொள்கையளவில் ஏற்றக் கொண்டதொரு அரசாங்கத்தின் பிராந்திய அரசியல் ஆதிக்கம். ( இவர்களின் இறுதி இலக்கு “அகண்ட பாரதம்” எனும் எல்லை தாண்டிய அரசியல் ஆதிக்கமாகும். )


   இலங்கையில் ..................

சிறும்பான்மை சமூகங்களுக்கெதிரான கோஷங்களுடன் இனவாத அமைப்புகளின் தோற்றம் . ( இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரான குறுகிய காலத்திற்குள் அரசியல் ரீதியாக சிறும்பான்மை சமூகங்களுக்கெதிரான அமைப்புகள் தோற்றம் பெற்றன. (உதாரணமாக பௌத்த சிங்கள பேரினவாதத்தின் தந்தை என்று குறிப்பிடப்படும் அநாகரிக தர்மபாலா சென்னை உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களை தளங்கொண்டுதான் இயங்கிவந்துள்ளார்.அவரது நண்பர்களாக பல இந்துத்துவ தலைவர்கள் இருந்துள்ளனர். புத்தகயாவில் இருந்த விகாரை இந்துத்துவ சங்கரமடத்தின்  அனைத்து இந்துத்துவா அமைப்புகளுடனும் அவர் நல்லுறவையே பேணி வந்துள்ளார். ஈழத்தின் சைவத் தமிழ் காவலர் ஆறுமுக நாவலருடன் கூட அவருக்கு நெருங்கிய நட்பு இருந்துள்ளது.

சின்ஹலே மகாவன்ச பூமி புத்திர, ஜாதிக ஹெல உறுமய, சிஹல வீரவிதகன என்று ஒரே கொள்கையையுடைய பல இனவாத அமைப்புகளின் தோற்றம்.
சுதந்திரத்திற்கு பின்னரான அவ்வப்போது ஏற்பட்ட சிறும்பான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் , கலவரங்கள்.

அதிகார வர்கத்தின் அனுசரணையில் பொது பல சேனா உருவாக்கம் !
சிவ சேனா ,விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர் எஸ் எஸ் பாணியிலான பள்ளிவாயில்களுக்கு எதிரான தாக்குதல்கள் உக்கிரம், முஸ்லிம்களின் சொத்துக்கள் இலக்கு வைத்த தாக்குதல்கள் !

இறுதியாக ..........

சிறும்பான்மை பிரதிநிதுவத்தினை சிதைக்கும் வகையிலான அரசியல் யாப்பு மாற்றம் !

            மேற்கூறிய அனைத்து உப தலைப்புகளும் முஸ்லிம் சமூகத்துடன் நேரடி தொடர்புள்ளதாகும். மேற்சொன்ன விடயங்களின் பின்னணியில் தற்போது இலங்கைக்கு உத்தியோக பூரவமாக  இறக்குமதி செய்யப்பட்டுள்ள    
       “ சிவ சேனா”    இந்துத்துவா தீவிரவாத அமைப்பை பற்றியும் அதன் இலக்கு எல்லைகள் பற்றியும் எமது சமூக ஆர்வலர்கள், உலமாக்கள்,அரசியல் தலைவர்கள் மிக நுட்பமாக அறிந்திருக்க வேண்டும். இதன் மூல வேராகவும் தாய் இயக்கமாகவும்  ராஷ்டிய சுயம் சேவக் சங்  என அழைக்கப் படும் “ஆர் எஸ் எஸ்” என அறியப் படுகின்றது. சமூக சேவை அமைப்பாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது கொலை, கலவரம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத, பயங்கரவாத நட வடிக்கைகளைச் செய்து முடிப்பதற்காக, தனக்குச் சம்பந்தமேயில்லாத அமைப்பு களைப் போல உருவாக்கி வைத்திருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், அபினவ் பாரத், இந்து தர்மசேனா போன்ற அமைப்புகளில் ஒன்று தான் “இந்த சிவ சேனா” வுமாகும்.    இது இலங்கை நாட்டிற்கு இறக்குமதி செய்யப் பட்டுள்ள இன்னுமொரு புதிய தலையிடியாக இருக்கும் அதேவேளை இதன் செயற்பாடுகளின் சேதாரத்தை நேரடியாக இந் நாட்டு  முஸ்லிம் சமூகத்துக்கே சுமக்க வேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

         
        இனப் பிரச்சினை தீர்வில் வடகிழக்கு இணைக்கப் பட வேண்டும் என்ற நிலையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்விற்கு எதிராக முஸ்லிம் சமூகம் நிலை கொண்டுள்ளதால் தம் இலக்கை அடைந்து கொள்ளும் அரசியல் பின்னணியை உருவாக்கும் நோக்கில் இந்துத்துவா தீவிரவாத அமைப்பான சிவ சேனாவை இலங்கைக்கு இறக்குமதி செய்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. காரணம் இதன் கர்த்தாவாக செயற்படக் கூடிய வவுனியாவை சேர்ந்த, இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான  மறவன்புலவு சச்சிதானந்தனுடன் கைகோர்த்து செயற்படும்   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இதன் தீவிர தொண்டராக செயற்படுகின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் வை. யோகேஸ்வரன் சிவசேனாவுக்காக வவுனியாவில் ஒரு காரியாலயத்தையும் 2016/௦9/09 ந் திகதி திறந்து வைத்துள்ளார்.. வடகிழக்கில் மட்டுமல்லாது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இனிமேல் இந்து முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட தேவையான பின்னணியை இந்த சிவ சேனா கட்சிதமாக மேற்கொள்ளும். குறிப்பாக வடகிழக்கில் இவ்வாரானதொரு சூழலை ஏற்படுத்துவதன் மூலம் வடக்கையும் கிழக்கையும் இலகுவாக இணைத்துவிட முடியும் என்ற சிந்தனையை ஏற்படுத்த இவர்கள் முற்படுவார்கள்..  
   
      தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் குரலாக  செயற்படுவதாகவும், புலிகளின் நிகழ்ச்சி நிரலே  அவர்களின் மறைந்த நிகழ்ச்சி நிரல் எனவும் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் அவ்வப்போது சுட்டிக்காட்டப் படுவதுண்டு. யுத்தத்தால் அகதிகளாக்கப் பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் அவர்களின் செயற்பாடுகளும் அதனையே உணர்த்துகின்றன.
    அதே வேளை சிவ சேனாவின் நிறுவுனரான தீவிர இந்துத்துவா வாதியான பால் தாக்கரே விடுதலை புலிகள் விடயமாக பல சந்தர்ப்பங்களில் கருத்துக் கூறுகையில் புலிகளின் போராட்டத்தை சிலாகித்து வரவேற்று கருத்துக் கூறியுள்ளார்.   தாம் தமிழ்ப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று தாக்கரே ஒப்புக் கொண்டுள்ளார். "விடுதலைப் புலிகளின் கம்பீரமான போராடும் முறைக்காக நான் அவர்களைக் குறித்துப் பெருமை அடைகிறேன்.” என்று கூறிய அவர், “எல்டிடிஈயின் மீதான தடையுத்திரவை மத்தியப் போக்கு கொண்ட நடுவண் அரசு நீக்க வேண்டும்” என்றும் அவர் விரும்பினார். ( இந்தியா டுடே , சாம்னா - சிவ சேனாவின் உத்தியோகப்பூர்வ தினசரி).

                 ஆகவே சிவ சேனாவின் இலங்கை வருகை எதிர்கால  இலங்கை அரசியலில் பாரிய தாக்கம் செலுத்தப் போவது உறுதியான விடயம் என்று எதிர்வு கூறலாம். வவுனியா “சிவ சேனா” துவக்க நிகழ்வில் அவர்களின் செயற்தளம் பற்றி அண்மையில் பி பி சி வானொலி செய்தி சேவையில் குறிப்பிடுகையில் “ வடகிழக்கு இந்துக்கள்  உற்பட மலையக ,மற்றும் தென்னிலங்கை வாழ் அனைத்து இந்துக்களையும் அதாவது 25 மாவாட்டங்களிலும் உள்ள இந்துக்களின் நலன் குறித்து இலங்கை சிவ சேனா இயங்க வுள்ளது என்று கருத்துக் கூறியுள்ளது.   அத்துடன் இந்தியாவிலுள்ள, அது போன்ற இயக்கங்களின்,  குறிப்பாக சிவசேனா, விஸ்வஹிந்து பரிசத், ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளின் ஆதரவும் தமக்கிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் இந்த இயக்கத்தின் அமைப்பாளராகிய மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவர்.    தமிழர்கள் அதிகம் வாழும் வவுனியாவில்  இந்த அமைப்பின் துவக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் தங்களுக்கு மகாராஷ்டிர சிவ சேனாவின் ஆதரவு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


      இந்தியாவில் உள்ள பல சிவ சேனா, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி., கோவாவை மையமாகக் கொண்ட ஹிந்து ஜனா ஜாக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகே தங்களது இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறியுள்ளார்.
இலங்கை  முஸ்லிம்களுக்கு ஈரான் மற்றும் ஈராக்கில் இருந்து நிதியுதவிகள் வருகின்றது என்றும் கிறிஸ்தவர்களுக்கு மேற்கத்திய மிஷனரிகளிடம் இருந்து நிதியுதவி வருகிறது என்றும் இந்துக்கள் மட்டும் தான் எந்தவித ஆதரவும் இல்லாமல் உள்ளனர் என்றும் இதன் தொடக்க விழாவில் மரவண் புலவு சச்சிதாநந்தன்  கூறியுள்ளார்.  தங்களின் இந்த முயற்சிக்கு, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., மற்றும் பா.ஜ.க., விடமிருந்து மிகுந்த ஆதரவு கிடைத்திருப்பதாகவும் தான் இந்த அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து இது குறித்து விரிவாக விவாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், திருகோணமலை மதத் தலைவர் தென் கைலாய ஆதீனம் ஆகியோர் 25 மாவட்டங்களிலும் இந்துக்களை பாதுகாக்கும்  திட்டங்களை முன்னெடுப்பதாக  கூறியுள்ளனர்.


மேலும் இந்திய சிவ சேனாவின் ராஜ்யசபா எம்.பி.யான சஞ்சய் ரவுட், ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையில்,  

                   “ இலங்கை  தமிழ் சமூகத்தினர் சிவ சேனை அமைப்பினை அங்கு தொடங்கியிருப்பதாகவும் தங்கள் கட்சியின் கொள்கை வேலைகளை சிவ சேனையின் ஆதரவுடன் செயல்படுத்துவார்கள்”  என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆக இந்திய சிவ சேனைக்கும் இலங்கை சிவ சேனைக்கும் நேரடி தொடர்புகள் இருப்பது இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லாத தெளிவான விடயமாகும்.

            ஆகவே சிவ சேனாவின் தலைவர் பற்றியும் அதன் கடந்த கால நிகழ்வுகள் பற்றியும் சுருக்கமாக அறிந்துகொள்வது சிறந்தது என்பதால் அதுபற்றிய அவதானத்தை செலுத்துவோம் ,


பால் தாக்கரே -  சிவ சேனா நிறுவுன தலைவர்.

பாலா சாஹேப் தாக்கரே என்று பிரபல வன்முறையாளராக அறியப்படும் பால் கேஷவ் தாக்கரே மராட்டி (1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் தேதி பிறந்தவர். இவர், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மஹாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவ சேனா வை ஆரம்பித்தவராவர்.

               பாலா சாஹேப் தாக்கரே தமது தொழில் வாழ்க்கையை மும்பய் நகரில் 1950ஆம் ஆண்டுகளில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்னும் ஒரு பத்திரிகையில் கேலிச் சித்திரக்காரராகத் துவங்கினார். அவரது கேலிச் சித்திரங்கள் தி டைம்ஸ் ஒஃப் இந்தியாவின் ஞாயிறு பதிப்புகளிலும் வெளியாயின. 1960ஆம் வருடம் அவர் மர்மிக் என்னும் கேலிச்சித்திர வார இதழ் ஒன்றைத் தனது சகோதரருடன் இணைந்து துவக்கினார். குறிப்பாக குஜராத்தியர் மற்றும் தென்னிந்தியக் கூலி வேலையாட்களை இலக்காக்கி, மும்பயில் மராத்தியர்-அல்லாதவர்களின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான பிரசாரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்

பிந்திய காலத்தில் தமது இயக்கத்தின் உத்தியோக பூரவ  செய்தி மடலாக “ சாம்னா”  (எதிர்த்து நில்) என்னும் பத்திரிகை ஒன்றை துவங்கினார். இந்தப்  பத்திரிகையில், எளிதில் உணர்ச்சிகளைத் தூண்டும், இன வன்முறைகளை கிளறிவிடும்  கட்டுரைகளை பால் தாக்கரே தொடர்ந்து பிரசுரிக்கத் தொடங்கினார்.


 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பால் தாக்கரே , பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே இரண்டாவது படத்தில் .

1966ஆம் வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி, அவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் (மராத்தியர்கள் என்றழைக்கப்படும்) பிறப்புரிமையாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நோக்கத்துடன் சிவ சேனாவைத் துவக்கினார். சிவ சேனாவின் ஆரம்ப கால நோக்கமானது தென்னிந்தியர்கள், குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள் போன்று வேறு மாநிலங்களிலிருந்து வந்த குடியேறிகளுக்கு எதிராக மராத்தியர்களை அணி சேர்க்கும் படியாக இருந்தது. பின்னர், இது பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி)யுடன்  ( தற்போதைய இந்திய ஆளும் கட்சி ) கூட்டு ஏற்படுத்திக் கொண்டது.

பிஜேபி-சிவ சேனா கூட்டணி 1995ஆம் வருடம் மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1995 முதல் 1999வது வருடம் வரை அரசு புரிந்த காலகட்டத்தில் தாக்கரேயை "தொலைவிலிருந்து இயக்குபவர்" என்று அடைபெயர் இட்டு அழைத்தனர். இதன் காரணம் அவர் அரசின் கோட்பாடுகள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு பெரும்பங்கு ஏற்றதேயாகும்.
         

வேறு மாநிலங்களிலிருந்து மும்பய் நகரில் குடியேறுபவர்கள், இந்து-அல்லாதவர்கள் (குறிப்பாக முஸ்லீம்கள்) மற்றும் பங்களாதேஷ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறும் முஸ்லீம்கள் ஆகியோரை எதிர்ப்பதில் தாக்கரே மிகவும் வெளிப்படையாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு வருகிறார். 1960ஆம் ஆண்டுகளின் இறுதிப்பகுதிகளில் துவங்கி 1970ஆம் ஆண்டுகளின் இடைக்காலம் வரையிலும் "மஹாராஷ்டிரா மராத்தியர்களுக்கே" என்ற தமது பிரசாரத்தின் ஒரு பகுதியாக தென் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் மும்பயை விட்டு வெளியேறா விட்டால் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் தவிர்க்க முடியாதது என  அச்சுறுத்தினார்.


சிவா சேனாவின் தற்போதைய தலைவன் உத்தவ் தாக்கரே .

2002ஆம் வருடம், தாக்கரே  முஸ்லிம்களுக்கு எதிராக  இந்துக்களின் தற்கொலைப் படைகளை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார் அவ்வாறு தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டால் தான் நம்மால் வந்தேறிகளின் வெறித்தனமான வன்முறையை எதிர்கொள்ள இயலும் என்று பகிரங்கமாக சாம்னா பத்திரிகையில் எழுதினார்.

தாக்கரேயின் முழக்கம் பற்றி ஏஷியா டைம்ஸ் மேலும் அறிவித்தது:
"இஸ்லாமியர்களுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு" "தொல்லை கொடுக்கும் இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்... நாலு கோடி [நாற்பது மில்லியன்] பங்களாதேஷ் இஸ்லாமியர்களை உதைத்துத் துரத்துங்கள்; அதன் பிறகு நாடு பாதுகாப்புறுதி பெறும்" என்று சிவ சேனைத் தலைவர் பால் தாக்கரே கூறினார். இந்தியாவை "இந்து ராஜ்யம்" (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், "நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்" என்றும் "மற்ற மதத்தவர்களை நாம் கவனித்துக் கொள்வோம்" என்றும் கூறினார்.

         தாக்கரேயின் பாசிச அரசியல் வாரிசாக அவரது மகன் உத்தவ் தாக்கரேவும், அவரது தம்பி மகன் ராஜ்தாக்கரேவும் உள்ளனர் என்றாலும், நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் இயக்கங்களிலும் அவரது மண்ணின் மைந்தர்கள் கொள்கையை ஆதரித்து அரசியல் நடத்தும் இனவெறியர்களை திட்டமிட்டு உட்புகுத்தியுள்ளார்கள். இவர்களின் வன்முறை வரலாறு பின்வருமாறு .........

பிப்ரவரி 1969-இல் மும்பையில் குடியேறிய  கர்நாடகத்தவர் மீது கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட தாக்கரேவின் குண்டர்கள் 59 பேரைக் கொன்று 274 பேரைப் படுகாயப்படுத்தினர்.

 1970-களில் தாக்கரேவின் இந்துவெறியானது பிவாண்டி, ஜலகோன், மகத் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலாகப் பரவியது. இந்திய நாட்டில் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் புற்று நோயைப் போன்றவர்கள்; அவர்களை அழிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது” என்று வெறியூட்டிய தாக்கரே, முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலைப் படையைத் திரட்டுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்.
ஜனவரி 1974-இல் தலித் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பாகவத் ஜாதவ் தாக்கரே கும்பலால் படுகொலை செயப்பட்டார். 1984-இல் விதர்பா பிராந்தியத்தில் தாழ்த்தப்பட்ட விவசாயிகள் மீது சிவசேனாவின் தொடர் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு, அவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு பயிர்கள் நாசமாக்கப்பட்டன.

1984-இல் விதர்பா பிராந்தியத்தில் தாழ்த்தப்பட்ட விவசாயிகள் மீது சிவசேனாவின் தொடர் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு, அவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு பயிர்கள் நாசமாக்கப்பட்டன.

1990-களில் மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதை எதிர்த்து சிவசேனா குண்டர்கள் இப்பிராந்தியத்தில் பயங்கரவாத வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். இருப்பினும், சிவசேனா குண்டர்கள் நடத்திய வன்கொடுமை வெறியாட்டங்கள் தொடர்பான 1,100 வழக்குகளை  1990-களின் இறுதியில் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தள்ளுபடி செய்தது.


1997-இல் ராமாபா அம்பேத்கர் நகரில் சிவசேனா குண்டர்கள் நடத்திய தாக்குதல் நடத்திய பின், போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டு, 30 பேர் படுகாயமடைந்தனர். ஆனாலும் சிவசேனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக 1992-93இல் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர், மும்பையில்  இந்துவெறியர்களும் சிவசேனா குண்டர்களும் முஸ்லிம்கள் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கும் நரவேட்டைக்கும் “பிரதான  மூளையாகச்” செயல்பட்டவர்தான் பால்தாக்கரே, என்று சிறீகிருஷ்ணா கமிசன் குற்றம் சாட்டிய போதிலும், மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலை நான்தான் தொடங்கி வைத்தேன். நான் அறிவித்த பிறகுதான் தாக்குதல் நின்றது” என்று பகிரங்க வாக்குமூலமாக சாம்னா இதழின் தலையங்கத்தில் தாக்கரே எழுதியிருந்த போதிலும், இந்திய அரசு இப்பயங்கரவாதியைத் தண்டிக்காமல் அதிகாரபூர்வ பயங்கரவாதியாக வைத்துப்
பாதுகாத்தது.

தாக்கரே மீதான இதர வழக்குகளும் அவரது சாம்னா நாளேட்டின் இனவெறிப் பிரச்சாரத்துக்கு எதிரான வழக்குகளும் இன்னமும் நடத்தப்படவேயில்லை.1992 டிசெம்பர் 06ந் திகதி  பாபர் மசூதி தகர்க்கப் பட்டபோது

 1949ம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது தொடக்கம் 1992ல் இந்திய உள் துரை அமைச்சர் லால் கிருஷ்ணன் அத்வானியின் ரதயாத்திரை மூலம்   பாபரி மஸ்ஜித் இடிப்பு, 1993 வட இந்திய மாநிலங்களில் பரவலாக ஏற்படுத்தப் பட்ட கலவரங்கள்  உள்ளடங்களாக  2002ம் ஆண்டு குஜராத் கலவரங்கள் வரையான நிகழ்வுகளின் மூலம் நடந்தேறிய இனச் சுத்திகரிப்பு , கொள்ளைகள் , கொலைகள்,சொத்தழிப்பு ,கற்பழிப்பு,போன்ற அத்தனை வன்முறைகளும் அரசு அங்கீகாரத்துடன் நடந்தேறியவைகளாகும். குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப் படுவதற்கு புறம்பாக சட்டத்தால் அவர்கள் பாதுகாக்கப் பட்டார்கள். தொண்டு நிறுவனங்களாலும் அமைப்புகளாலும் பதியப் பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டு அநீதியிளைக்கப் பட்டவர்கள் மீண்டும் மீண்டும் ஒடுக்கப் பட்டார்கள். அநியாயக்காரர்கள்  அங்கீகாரம் பெற்றார்கள்.

        இந்த தொடர் நிகழ்வுகள் உலக அளவில் இந்தியாவுக்கு தலை குனிவை ஏற்படுத்தியதை பொறுத்துக் கொள்ளாத  இந்திய அளவில் பெயர் பெற்ற சமூக அறங்காவலர்களாக மதிக்கப் படக் கூடிய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் , வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற ஐ பி எஸ் அதிகாரிகள் உள்ளடங்கலாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு “ 2002 குஜராத் இனப் படுகொலைகள்” சம்பந்தமாக ஒரு ஆய்வறிக்கை சமர்பிக்கப் பட்டது. “ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்” என்று அழைக்கப்படும்  பிரபலமான இக்கமிஷன், இந்தியாவின்  ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி ஆர் கிருஷ்ணய்யர் எனும் பெருந்தகையின் தலைமையில் உருவாகப் பட்டதாகும். இந்தக் கமிஷனில் அங்கம் வகிக்கும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த உத்தியோக பூர்வ கமிஷனின் அறிக்கையின் படி இனங்காணப்பட்ட அத்தனை குற்றவாளிகளும் மேற்குறித்த ஆர் எஸ் எஸ் , சிவ சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், அபினவ் பாரத், இந்து தர்மசேனா போன்ற அமைப்புகளின் தொண்டர்களாகவே இனங்காணப் பட்டுள்ளார்கள்.

                  “ இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் கீழ் இந்தக் கொடூர குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சரி, சட்டம் உங்களை விடப் பெரியது. இந்தப் பிரமாண்டமான அறிக்கையை சமர்பிப்பதே எமது செய்தியும் பணியுமாகும்”  
   

    என்று இந்த அறிக்கையில் குறிப்பிட்ட எட்டு அங்கத்தவர்களும் உத்தியோகப்பூர்வமாக கையெழுத்திட்டு தெரிவித்துள்ளார்கள்.


 இந்த ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனின் தலைவர் ஓய்வுபெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி வி ஆர் கிருஷ்ணய்யர் அவர்களின் வேண்டுகோளை கீழே காணலாம் .

   கடந்த 2012 நவம்பர் 17ந் திகதி பால் தாக்கரே இயற்கை மரணம் அடைந்த போது வாஜ்பாயின் அப்போதைய பி ஜே பி அரசாங்கம் ராஜமரியாதையுடன் அவரின் இறுதி ஊர்வலத்தை நடத்தியது மற்றுமல்லாமல் அந்த பூத உடலுக்கு இந்திய தேசிய கொடியை போர்த்தி மரியாதை செலுத்தியது. இதற்கெதிராக இந்திய மனித உரிமை அமைப்புகள் , இடதுசாரி கம்யுனிஸ கட்சிகள் தமது பலத்த எதிர்ப்புகளையும் கண்டனத்தையும் தெரிவித்தன.


இந்திய தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட தாக்கரேயின் பூத உடல்.

 இவரின் மரணம் பற்றி எழுதிய ஒரு இந்திய கம்யுனிஸ்ட் எழுத்தாளனின் ஒரு இணையப் பதிவு இவ்வாறு உள்ளது, “  பால்தாக்கரே கடந்த நவம்பர் 17 அன்று இயற்கையாக மரணமடைந்துவிட்டார் . ஒரு இனவெறி-இந்துவெறி பாசிச பயங்கரவாத கிரிமினல் மாஃபியா கும்பலின் தலைவன் தண்டிக்கப்பட்டு, பலமுறை தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படாமல், இயற்கையாக மரணமடைந்திருப்பது வருத்தமானதுதான்.  செத்தவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும், அவனைத் தெய்வமாக்குவதென்பது இந்துத்துவ மரபு. அந்த வழியில் முதலாளித்துவ ஊடகங்களும் ஓட்டுக்கட்சிகளும் தாக்கரேவுக்காக ஒப்பாரி வைத்து, அவரது சிவசேனா கும்பலின் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்களைச் சூடு சோரணையின்றி மூடிமறைத்தன. ஆனால், இப்பயங்கரவாத கும்பலின் இரத்தவெறி பிடித்த வரலாறை நாட்டு மக்கள் ஒருக்காலும் மறக்கவே முடியாது.
   
      எந்த அரசுப் பதவியிலும் இல்லாத, இந்துவெறி – இனவெறி பாசிச பயங்கரவாதியான பால்தாக்கரேவின் உடலுக்குத் தேசியக் கொடியைப் போர்த்தி அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக  வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு, தேசிய ஒருமைப்பாட்டை உபதேசிக்கும் இந்திய அரசு தேசியக் கொடியைப் போர்த்தி மரியாதை செய்தது ஏன் என்பது புரியாத புதிரல்ல. ஏனென்றால் இந்திய அரசானது இந்துத்துவ மேலாதிக்க, பாசிச சர்வாதிகார அரசு.
     

      தாக்கரேவின் பாசிச அரசியல் வாரிசாக அவரது மகன் உத்தவ் தாக்கரேவயும், அவரது தம்பி மகன் ராஜ்தாக்கரேயும் உள்ளனர். நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் இயக்கங்களிலும் அவரது மண்ணின் மைந்தர்கள் கொள்கையை ஆதரித்து அரசியல் நடத்தும் இனவெறியர்கள் இருக்கவே செகிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு வெவ்வேறு அளவுகளில் சேவை செயும் இயக்கங்களும் கட்சிகளும் இன்னமும் நீங்காத அபாயமாக நீடிக்கவே செகின்றன.”  என்று  தமது கருத்தை பதிவு செய்துள்ளான்.

இன்று இலங்கையின் அரசியல் நகர்வுகளின் பிரதான பேசுபொருளாக கருதக் கூடிய இனப் பிரச்சினைக்கான தீர்வுகளில் சர்வதேச , பிராந்திய அரசியல் செல்வாக்குகள் முக்கியமான  தீர்வு புள்ளிகளாக செயற்படுகின்றன. இதில் இந்தியாவின் செல்வாக்கு இன்றியமையாததாக உள்ளது. ஜனாதிபதி மைத்ரி அவர்கள் தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்  முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கே மேற்கொண்டார் என்பதும் , அதைத் தொடர்ந்து  இதுவரைக்கும் மூன்று முறை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். வட கிழக்கை மையப் படுத்தியே தீர்வு திட்டம் வரையப் படும் என்பதும் நிதர்சனமானதகும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, புலிகளால் விரட்டப் பட்டு அகதிகளாக்கப் பட்ட  முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கமும் , தமிழ் தேசிய கூட்டமைப்பும் எந்தவித கரிசனையுமில்லாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தருவாயில் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றினை அல்லாமல் முஸ்லிம்கள் மீது திணிக்கப் படும் தீர்வொன்றினை முன்வைக்கப் படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளக்கூடிய அரசியல் பின் புலம் முஸ்லிம்களுக்குள்ளதா எனும் பாரியதொரு கேள்விக்கு முன்னால் இனிவரும் காலங்களில் எமது அரசியல் நகர்வுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய தொரு முக்கிய கால கட்டத்தில் உள்ளோம்.


      இதுகாலவரை இலங்கை முஸ்லிம்கள் இரண்டு பெரும்பான்மை கட்சிகளூடாகவும், வடகிழக்கை பொறுத்தளவில் தனித்துவ அரசியலிலும்  ஜனநாயக ரீதியில் தமது  அரசியல் முன்னெடுப்புகளை நகர்த்தி வந்துள்ளனர். ஆனால் இனிவரும் காலங்களில் தனித்துவ அரசியல் நகர்வின் மூலமே எமது இருப்பை உறுதிசெய்துகொள்ள வேண்டுய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை கட்சிகளினூடான எமது பிரதிநிதித்துவங்கள் சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படுகின்ற கருவிகளாகவே இயங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை வட கிழக்கு முஸ்லிம்கள் இதுகால வரை தனித்துவ  அரசியலுக்கு வழங்கி வந்த ஆதரவில் பாரிய நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதையும் நாம் அவதானிக்க வேண்டும். இதற்கான பிரதான காரணமாக உரிமைக் குரலாக உருவெடுத்த முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் இயந்திரமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , தலைவர் அஷ்ரபின் மறைவிற்கு பின்  கடந்த 16 வருடங்களாக சோபையிழந்த  சமாதான  குரலாகிவிட்டதாகும். அதே வேளை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந் நாட்டில் முஸ்லிம் சிறும்பான்மையினருக்கு எதிராக நடந்தேறிய வன்முறைகளுக்கு எதிராகவும் , பாதிக்கப் பட்டவர்களுக்காகவும் உரிய இடத்தில் உரிய சந்தர்ப்பத்தில் குரல் கொடுத்து செயற்பட்டு வரும்     அ இல ம கா தலைமை மீது மக்கள் அபிப்ராயம் திரும்பியுள்ளதால் இத சந்தர்ப்பத்தை இலங்கை முஸ்லிம் சமூக தலைமைகள் சாதுரியமாக பயன்படுத்த வேண்டும் .
         

         பொது பல சேனாவானாலும், பிரதமர் ரணிலாக இருந்தாலும் சரி , ஜனாதிபதி மைத்ரியாக இருந்தாலும் சரி , தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன் அல்லது விக்னேஸ்வரன் ஐய்யாவானாலும் சரி நேருக்கு நேரான வெளிப்படை தன்மையுடன் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி பாதிக்கப் பட்ட தம் சமூகத்துக்கான நீதி நியாயங்களை உரிய தருணத்தில் தமது போராட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் இந் நாட்டு முஸ்லிம்களின் ஜனரஞ்சக தலைவராக தமது அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளார் அ இல ம கா தலைமை.
 

    இலங்கை சிவ சேனாவின் தலைமை காரியாலயம் வவுனியாவிலேயே திறந்து வைக்கப் பட்டுள்ளது. இது  அ இல ம கா தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களின் தேர்தல் மாவட்டமாகும். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் இங்கு மூவின மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப் படுத்தியே தமது அரசியல் முன்னெடுப்புகளை செய்து வருகின்றார். குறிப்பாக புலிப் பயங்கர வாதத்தால் பாதிக்கப் பட்ட தமிழ் சமூகத்தின் மீள் குடியேற்றம் ,  கல்வி, பொருளாதாரம் , போன்ற அடிப்படை தேவைகளை பெற்றுதருவதிலும் அவர்களின் வாழ்க்கை அடிப்படைகளை மறுசீரமைக்கும் திட்டங்களையும் பாரபட்சமின்றி முன்னெடுத்துவரும் வேளையில் இவ்வாறான இனவாத அமைப்புகளை தோற்றுவிப்பதன் மூலம் பாரிய விபரீதங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  
   

  ஆகவே எதிர்காலத்தில் இந் நாட்டில் நடைபெறவிருக்கும் அரசியல் மாற்றங்கள் குறிப்பாக தேர்தல் முறைமை மாற்றமும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ உறுதிப் பாடும் , யாப்பு மற்றம் , வடகிழக்கு இணைப்பும் முஸ்லிம் தரப்பு நிலைபாடும் போன்ற தலைப்புகளில் இந் நாட்டு முஸ்லிம் சமூகம் பறந்து பட்டதொரு கருத்தாடலை மேற்கொள்ள வேண்டும் . நடைமுறைப்படுத்த விருக்கும் தகவலறியும் சட்டத்தின் மூலம் பூரண அனுகூலங்களை எமது சமூகம் பெற்றுக் கொள்ளும் வகையில் புத்திஜீவிகள் அணிசேர்க்கப் பட்டு கடந்த காலங்களில் எம் சமூகம் எதிர் கொண்ட பேரழிவுகள், சேதங்கள் , இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு நியாயம் பெறவும் எதிர்காலத்தில் எமது இருப்பையும் பாதுகாப்பையும் தனித்துவத்தையும் பேணும் வகையிலான பொறிமுறைகளை உருவாக்குவதிலும் எமது கவனத்தை செலுத்த வேண்டிய காலம் இதுவென உணர வேண்டும் .ஏ எம் எம் முஸம்மில், ( BA- Hons) 
கௌரவ கைத்தொழில் வர்த்தக அமைச்சர்
அல் ஹாஜ் ரிஷாத் பதியுத்தீனின்     
பதுளை மாவட்ட இணைப்பாளர், 
இலங்கை முஸ்லிம்களின் வடகிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பின் மத்தியில் இலங்கையில் சிவ சேனா ???? இலங்கை முஸ்லிம்களின்  வடகிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பின் மத்தியில் இலங்கையில் சிவ சேனா ???? Reviewed by Madawala News on 10/20/2016 07:21:00 AM Rating: 5