Free Space

இளைய மகள் - மூத்த மகள் விவகாரம்.. "மருமகனை கவ்வாத்து கத்தியால் வெட்டி கொன்றார் மாமனார்"



மாமனார் ஒருவர் தனது மகளின் கண­வ­ரான மரு­ம­கனை கத்­தியால் வெட்டிப் படு­கொலை செய்த சம்­பவம் ஒன்று காலி நெலுவ அமல்­வத்த தோட்­டத்தில் நேற்று முன்­தினம் இரவு 9 மணி­ய­ளவில் இடம்­பெற்­ற­றுள்­ளது.

சம்­ப­வம் தொடர்பில் தெரியவரு­தா­வது, தனது மூத்த மகளின் கணவன் இரவு 9 மணி­ய­ளவில் வீட்டின் கதவை தட்­டிய போதே மரு­ம­கனை மாமனார் கத்­தியால் வெட்டி கொலை செய்­துள்ளார்.இச்­சம்­ப­வத்தின் போது உயி­ரி­ழந்­தவர் வடி­வேலு தியா­க­ராஜா என்ற 36 வய­து­டைய தெனி­யாய பல்­லே­கம பிர­தே­சத்தை மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார்.

இச்­சம்­ப­வத்தின் போது உயி­ரி­ழந்த நபர் தனது மூத்­த­ம­களின் கணவன் என்றும் அவர் திரு­மணம் முடித்து பிள்ளை பிறந்த பின்னர் பிள்­ளையை பார்த்து கொள்­வ­தற்கு தனது இளைய மகளை அனுப்பி வைத்­த­தா­கவும் அதன் பின்னர் மரு­ம­க­னுக்கும் இளைய மக­ளுக்கும் காதல் ஏற்­பட்டு 3 வரு­டங்கள் ஆகி­ய­தா­கவும் அதன் பின்னர் 2 மாதங்­க­ளுக்கு முன்பு இளைய மகளை சந்­தேக நபர் வீட்­டுக்கு கூட்­டியும் வந்­துள்ளார் .

அதன் பின்னர் நேற்று இரவு தனது இளைய மகளை பார்ப்­ப­தற்கு மரு­மகன் வந்த போது சந்­தேக நபர் கவ்­வாத்து கத்­தியால் வெட்டி கொலை செய்­துள்ளார்.
இச்­சம்­ப­வத்தின் போது கைது­செய்­யப்­பட்­டுள்­ளவர் கண­பதி என்ற 48 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யாவார்.

 உடுகம நீதிமன்றத்தின் பதில் கடமை நீதிவான ஹேமன்த விதாரண சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.
இளைய மகள் - மூத்த மகள் விவகாரம்.. "மருமகனை கவ்வாத்து கத்தியால் வெட்டி கொன்றார் மாமனார்" இளைய மகள் - மூத்த மகள் விவகாரம்.. "மருமகனை கவ்வாத்து கத்தியால் வெட்டி கொன்றார் மாமனார்" Reviewed by Madawala News on 10/04/2016 10:32:00 AM Rating: 5