Free Space

கொழும்பு மருதானை ஜும்மா மஸ்ஜிதில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி.



கொழும்பு மருதானையில் அமைந்துள்ள "சின்னப்பள்ளி" என அழைக்கப்படும் ஜும்மா மஸ்ஜிதில் தினமும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை மாணவர்கள் சுய கற்றலிலும் குழுசார் கற்றலிலும் ஈடுபடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பள்ளிவாயலின் மேல் மாடியில் குறித்த நேரத்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 50 மாணவர்களுக்கான தளபாடங்களும் இட வசதிகளும் அங்கு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மாலை வேளையில் வீட்டில் கற்பதற்கான சூழல் மற்றும் இடவசதி இல்லாத மாணவர்களும், கொழும்பில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கற்றலில் ஈடுபடுகின்ற மாணவர்கள், மஸ்ஜிதில் பேணப்பட வேண்டிய ஒழுக்கவிழுமியங்களைப் பேணி நடந்துகொள்வதோடு, தாம் கற்கும் நேரத்தில் நடைபெறுகின்ற பர்ளுத் தொழுகையில் இமாம் ஜமாஅத்துடன் கலந்துகொள்ளவும் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

மேலதிக தகவல்களுக்கு...

சகோ. அன்வர் சதாத். - 0777 777 910

இத்தகவலை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தேவையுடைய மாணவர்கள் பயனடையட்டும்.

(தகவல்: அன்வர் சதாத் )
கொழும்பு மருதானை ஜும்மா மஸ்ஜிதில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி. கொழும்பு மருதானை ஜும்மா மஸ்ஜிதில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி. Reviewed by Madawala News on 10/20/2016 01:45:00 PM Rating: 5