Free Space

(படங்கள்) சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் வீட்டில் புகுந்து திருட்டு.




தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் என்பவரின் வீட்டின் ஜன்னலினை கழட்டி வீட்டினுல் உட்புகுந்த திருடர்கள் கழட்டி கொழுவி வைக்கப்பட்டிருந்த ரவுசர் பக்கெட்டிலிருந்து 31 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருடி விட்டு ரவுசரையும் கார் திறப்பினையும் வெளியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக குறித்த சட்டத்தரணியினால் இன்று (27) காலை மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தரணி உறங்கி கொண்டிருந்த போது இன்று அதிகாலை 3 மணியளவில் தீடிரென கண்விளித்து பார்த்த போது வீட்டில் போடப்பட்டிருந்த மின் குமிழ்கள் அணைக்கப்பட்டிருந்துள்ளது.

இதன் பிறகு அவர் மின் குமிழை போட்ட போது வீட்டின் ஜன்னலொன்று உடைக்கப்பட்டு ரவுசர் வெளியில் வீசப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து பணம் வைத்திருந்த ரவுசரை பார்த்த போது பணம் திருடப்பட்டு கார் திறப்பு மாத்திரம் வெளியில் வீசப்பட்டிருந்ததாக குறித்த சட்டத்தரணியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.








(படங்கள்) சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் வீட்டில் புகுந்து திருட்டு. (படங்கள்)  சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் வீட்டில் புகுந்து திருட்டு. Reviewed by Madawala News on 10/27/2016 08:34:00 PM Rating: 5