முச்சக்கர வண்டி சாரதிகளிடம் எனது அன்பான வேண்டுகோள்.



ஆரம்பத்திலேயே  என்னுடைய  கோரிக்கையை  உங்களிடம்  முன்வைத்து  விடுகிறேன்.  தயவு  செய்து  எங்கள்  உயிர்களை  பாதுகாத்திடுங்கள்.  வீதி  போக்குவரத்து  விதிகளை  நீங்கள்  குறைந்த  பட்சம்  கடைப்பிடித்தாலே  எமது      நாட்டில்  இடம்பெறும்  விபத்துக்களின்  சதவீதத்தை  அரைவாசியாக  குறைத்திடலாம்.

வீதிகளில்  நீங்கள்  பயணிக்கும்  போது  எப்போதும்  "முந்திச்  செல்ல  வேண்டும்"  என்பதிலேயே  மும்மரமாக  இருக்கிறீர்கள்.  உண்மையில்  அதற்கு  உங்களுக்கு  முழு  உரிமை  இருக்கின்ற அதேவேளை  உங்களைப்  போன்று  வீதியில்  பயணிக்கும்  ஏனைய  சாரதிகளுக்கும்  சம  உரிமை  இருக்கின்றதல்லவா  ?  முந்திச்  செல்ல  வேண்டுமாயின்  வழமையாக  வலது  பக்கத்தினாலேதானே  செல்ல  வேண்டும்.  ஆனால்  நீங்கள்  அதிகமான  சந்தர்ப்பங்களில்  இடது பக்கத்தினால்  மிக  வேகமாக  அல்லவா  செல்கிறீர்கள்.  இதனால்  நீங்கள்  சாதித்துக்  கொள்வதென்ன  ?  வாடிக்கையாளர்களிடம்  நற்பெயர்  வாங்கிக்கொள்வதா  ?  ஒரு  முச்சக்கர  வண்டி  வாடிக்கையாளராக  நான்  உங்களைப்  போன்றவர்களை  நினைத்துக்  கொள்தெல்லாம்  "ஏன்  இவ்வளவு  வேகமாக  போகிறீர்கள்,  இதுதான்  இந்த  ஆட்டோவில்  வார  கடைசி  தடவை,  எங்கள  கொல்லவா  கொண்டு  போரிங்க"
வேகமாக  சென்று  வாடிக்கையாளரிடம்  நற்பெயர்  பெற்றுக்கொள்வதற்கு  பதிலாக  அவர்களிடம்  அவப்பெயரையும்  அதே  வீதில்  பயணிக்கும்  ஏனைய  வாகன  சாரதிகளிடம்  சாபத்தையும்  அல்லவா  வாங்கிக் கட்டிக்  கொள்கிறீர்கள்.

3 சக்கர  வாகனமானது  4  சக்கர  வாகனம்  போன்றே  சமநிலை  உடையது  என்ற  எண்ணத்திலா  கார் ,  பேருந்து  போன்ற  வாகனங்களுடன்  போட்டி  போடுகிறீர்கள் ?  உங்கள்  அர்த்தமற்ற  போட்டிக்கு  எங்களை  ஏன்  பலிக்கடா  ஆக்குகிறீர்கள்  ?

வாகனங்கள்  வீதி  சமிஞ்ஞைகளுக்கு  கட்டுப்பட்டு  தொடரி  போன்று  வரிசையாக  நிற்கும்  போது  நீங்கள்  மட்டும்  ஏன்  அவசரக்குடுக்கை  போன்று  வீதியில்  இரட்டை  வெண்ணிற  கோடுகள்  இடப்பட்ட  இடம்  என்றும்  பாராமல்  முந்திச்  சென்று  வீதியின்  எதிர்ப்புறமாக  வாகனங்களுடன்  மோதி  தற்கொலை  செய்து  கொள்கிறீர்கள்.

அது  மட்டுமல்ல  உங்களது  திருவிளையாடல்,  வீதியில்  மோட்டார்  சைக்கிள்  சாரதிகள்  கூட  செல்ல  முடியுமா  என  பின்வாங்கக்கூடிய  மிகச்சிறிய  இடைவெளியில் கூட முச்சக்கர  வண்டியை  செலுத்தி  ஏனைய  வாகனங்களுக்கும் இடைஞ்சல்களை  ஏற்படுத்துவதோடு  நில்லாமல்  விபத்துக்கள்  ஏற்படவும்  ஏதுவாகிறீர்கள்.  எனவே  உங்களிடம்  நான்  வேண்டிக்  கொள்வதெல்லாம்  தயவு  செய்து  உங்களை  நம்பி  வரும்  வாடிக்கையாளர்களை  பாதுகாப்பாக  உரிய  இடத்துக்கு  கொண்டு  போய்  சேர்த்திடுங்கள்.  வீதியில்  பயணிக்கும்  ஏனைய  சாரதிகளுக்கும்  உங்களைப்  போன்றே  குடும்பம்,  பிள்ளைகள்  இருக்கிறார்கள்  என்பதை  நினைவிற்  கொள்ளுங்கள்.

யூ.எம்.  லுத்பி(f)
இயன்  மருத்துவர்
போதனா  வைத்தியசாலை
கண்டி
முச்சக்கர வண்டி சாரதிகளிடம் எனது அன்பான வேண்டுகோள். முச்சக்கர  வண்டி  சாரதிகளிடம் எனது அன்பான வேண்டுகோள். Reviewed by Madawala News on 10/25/2016 05:21:00 PM Rating: 5