Free Space

சிகரட் உள்ளிட்ட புகையிலை போதை பொருட்களால் அரசுக்கு வருமானத்தை விட செலவு அதிகம்.



சிகரட் உள்ளிட்ட புகையிலை போதை பொருட்கள் மற்றும் மதுபான போதைப்பொருற்கள் மூலம் இலங்கை அரசு வருடம் ஒன்றுக்கு 104 பில்லியன் வருமானம் கிடைப்பத்த போதும் அதனால் ஏற்படும் நோய்களுக்கு சிகிற்சை வழங்க 140 பில்லியனை அரசு செலவு செய்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போதை ஒழிப்பு தொடர்பில் விழிப்பூட்டும் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட போதை ஒழிப்பு தேசிய படையணியின்  தலைவர்  வைத்தியர் பாலித குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

இலங்கையில் அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதை பொருட்களால் அரசுக்கு 104 பில்லியன் வருவாய் கிடைத்த போதும் போதை பொருற்களால் ஏற்படும் நோய்களுக்கு சிகிற்சை வழங்க வருடம் தோரும் மருத்துவ செலவுகளுக்காக சுகாதார அமைச்சு 140 பில்லியனை செலவு செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஏற்படும் மரணங்களில் போதை பொருட்களால் ஏற்படும் நோய்கள் காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக  சுட்டிக்காட்டப்படுள்ளது.
சிகரட் உள்ளிட்ட புகையிலை போதை பொருட்களால் அரசுக்கு வருமானத்தை விட செலவு அதிகம்.  சிகரட் உள்ளிட்ட புகையிலை போதை பொருட்களால் அரசுக்கு வருமானத்தை விட செலவு அதிகம். Reviewed by Madawala News on 10/13/2016 08:39:00 AM Rating: 5