Free Space

டொனால்ட் டிரம்ப் ஒரு ஆபாசப்பட நடிகர்.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இருவர் குறித்தும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் பற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டில் ஆபாசப்படம் ஒன்றில் டொனால்டு டிரம்ப் நடித்துள்ளதாக வெளியாகியுள்ளது தான் அந்த செய்தி.

பெண்கள் மற்றும் ஆண்கள் நிர்வாணமாக நடித்த அந்த படத்தில் உறவு காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.

வீடியோ செண்டர்போல்டு (Video Centerfold) என்ற பெயருடைய அந்த ஆபாசப்படத்தில் தோன்றும் ஆண்களில் ஒருவராக டொனால்டு டிரம்ப் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

நியூயோர்க் நகரில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் ஆண்களுடன் தோன்றும் டொனால்ட் டிரம்ப் ஒரு மது பாட்டிலை திறந்து அதில் இருந்து வெளியேறும் நுரையை ஆண்கள் மீது தெளிப்பதாக காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி கிளண்டனுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் முன்னாள் உலக அழகியான அலிசிய மசோடா  என்பவர் ஆபாசப்படத்தில் முன்பு நடித்துள்ளார் என டொனால்டு டிரம்ப் சில தினங்களுக்கு முன்னர் விமர்சனம் செய்துள்ளார். இந்த விமர்சனத்தை தொடர்ந்து 2000-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட அந்த ஆபாசப்படத்தில் டொனால்டு டிரம்ப் நடித்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் ஒரு ஆபாசப்பட நடிகர். டொனால்ட் டிரம்ப் ஒரு ஆபாசப்பட நடிகர். Reviewed by Madawala News on 10/01/2016 04:20:00 PM Rating: 5