Kidny

Kidny

அமெரிக்கா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தகவல்களால் சரிகிறது டொனால்ட் ட்ரம்ப் செல்வாக்கு!அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் முதல் நேரடி விவாதத்திற்கு பிறகு ஹிலரி க்ளிண்டனுக்கு ஆதரவு பெருகிறது. எதிரணியில் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு புதுப்புது சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறார்..

கடும் போட்டி நிலவும் ஃப்ளோரிடா மாநிலத்தில் ட்ரம்பை விட ஹிலரி 4 சதவீதம் கூடுதல் ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இன்னொரு முக்கிய மாநிலமான நியூ ஹாம்ஷையரில் ஹிலரி 42 சதவீதம் ட்ரம்ப் 35 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளனர்.

முதல் விவாதத்திற்கு பிறகு மேசன் - டிக்சன் அமைப்பு ஃப்ளோரிடாவில் நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் WBURவின் நியூ ஹாம்ஷயர் கருத்துக் கணிப்புகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஃபாக்ஸ் நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பிலும் ஹிலரி முன்னணியில் இருக்கிறார். யார் சிறந்த ஜனாதிபதி  ஆவார் என்ற கேள்விக்கு ஹிலரிக்கு 43 சதவீதமும் ட்ரம்ப் க்கு 40 சதவீதம் பேர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.. மூன்றாவது வேட்பாளர் கேரி ஜான்சனுக்கு 8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது
குறிப்பிடத்தக்கதாகும்.

அதிபர் பதவிக்கான பொறுமையும் நிதானமும் உள்ளவர் யார் என்ற கேள்விக்கு 67 சதவீதத்தினர் ஹிலரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ட்ரம்புக்கு 37 சதவீதம் மட்டுமே ஆதரவளித்துள்ளனர். முதலாவது நேரடி விவாதத்தில் ஹிலரி வெற்றி பெற்றுள்ளதாக 61 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு பக்கம் இஸ்லாமிய சட்டம் ஆண்களுக்கு சிறந்தது என்று முன்பு ட்ரம்ப் கூறியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஷரியா சட்டத்தின் படி, ஆண்கள் எப்போது வேண்டுமானலும் மனைவியை விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று முன்பு கருத்து கூறியிருக்கிறார்.

அதை தற்போது வெளியிட்டு ட்ரம்ப் எப்போதுமே பெண்களுக்கு எதிரானவர் என்று ஹிலரி தரப்பு பரப்புரை செய்கின்றனர். ட்ரம்பின் முதல் மனைவி கூறியதாக மற்றுமொரு தகவலும் உலா வருகிறது. குழந்தை பெற்ற பிறகு அழகு குறைந்து விட்டதாகவும் அதானல் விவாகரத்து செய்வதாக ட்ரம்ப் தன்னிடம் தெரிவித்தார்.

நான் முக அழகையும் உடல் அழகையும் மெருகுபடுத்திப் பார்த்தாலும், ட்ரம்பின் கண்களுக்கு கவர்ச்சியாக தெரியவில்லை. ஆகவே என்னை விவாகரத்து செய்து விட்டார் என்றும் கூறியுள்ளார். ட்ரம்புக்கு பெண்கள் ஓட்டுகள் கிடைக்காது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டு வருகிறார். அதிபர் விவாதத்தில் ட்ரம்ப் பேசிய பேச்சுக்களை அவருக்கு எதிராக திருப்பும் பணியையும் ஹிலரி தரப்பு செய்து வருகிறது.

முன்னதாக நேர் எதிராக பேசிய பேச்சுக்களை வெளியிட்டு, அமெரிக்க மக்களிடம் பொய் சொல்லிவிட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள். நாடு முழுவதும் குடியரசுக்கட்சிக்கு ஆதரவான பத்திரிக்கைகள், ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிலரிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. குடியரசுக் கட்சியின் கோட்டையான டெக்சாஸ் மா நிலத்தின் முக்கிய பத்திரிக்கைகள் கூட ஹிலரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களே கைவிட்டு விட்ட நிலையில் ட்ரம்ப் இருக்கிறார். அடுத்த விவாதத்தில் ட்ரம்ப் பங்கேற்பாரா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர். ஆனாலும் அவர் மீது நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கிறார்கள். சரிந்துவரும் செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவாரா? அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற ஆவலும் எழுந்துள்ளது.

நஷ்டக் கணக்கைக் காட்டி அரசுக்கு கடந்த 18 ஆண்டுகளாக வரிகட்டாமல் ஏமாற்றி வந்திருக்கிறார் அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப். இந்தத் தொகை மட்டுமே ரூ 6,100 கோடி என்பது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஹிலரி கிளிண்டனும் சமீபத்தில் நேருக்கு நேர் விவாதித்தனர்.

அப்போது, "வருமான வரி கணக்கு விவரங்களை டிரம்ப் வெளியிடாமல் மறைக்கிறார்" என ஹிலரி குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், "நீங்கள் அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவி வகித்த காலகட்டத்தில் 33 ஆயிரம் இமெயில்களை அழித்ததை மீண்டும் எப்போது வெளியிடுகிறீர்களோ, அப்போது நானும் என் வருமான வரி கணக்கை வெளியிடுவேன்," என்றார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக டொனால்டு டிரம்ப் 1995-ம் ஆண்டு, தொழிலில் தனக்கு 916 மில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.6,100 கோடி) நஷ்டம் ஏற்பட்டதாக 1995-ம் ஆண்டு கணக்கு காட்டியுள்ளார்;

இதன்மூலம் அவர் 18 ஆண்டுகள் வரி செலுத்தாமல், சட்டப்பூர்வமாக தப்பி வந்ததை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

இது அவர் அடைந்த அசாதாரண பலம் என்றும், அட்லாண்டிக் நகரில் 3 சூதாடும் விடுதிகள், விமான நிறுவன தொழில், மேன்ஹட்டன் நகரில் பிளாசா ஓட்டலை வாங்கியது ஆகியவற்றின்மூலம் அவர் நிதி இழப்பை சந்தித்துள்ளார். அதைக் காட்டியே தொடர்ந்து வரி கட்டாமல் இருந்துள்ளார் என்றும் அந்தப் பத்திரிகை கூறுகிறது. இதனை டிரம்பின் பிரசார குழுவினர் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை. மாறாக, "நியூயார்க் டைம்ஸ் ஏடு சட்டத்துக்கு புறம்பாக வருமான வரி ஆவணங்களை பெற்று தகவல்கள் வெளியிட்டுள்ளது. இது ஹிலரி கிளிண்டன் பிரசார குழுவின் விரிவாக்கமாக உள்ளது" என குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விவகாரம், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தகவல்களால் சரிகிறது டொனால்ட் ட்ரம்ப் செல்வாக்கு! அமெரிக்கா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தகவல்களால் சரிகிறது டொனால்ட் ட்ரம்ப் செல்வாக்கு! Reviewed by Madawala News on 10/03/2016 08:35:00 PM Rating: 5