Accaddemy

உலமா கிரிக்கட்டில் சாதனைபடைத்த மாத்தளை கிரீன் ஸ்டார் அணி.



கடந்த 22,23 ம் திகதி களுத்துறை மாவட்டம் தர்கா நகரில் உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களுக்கான மென் பந்து கிரிகெட் சுற்றுப்போட்டி ஒன்றை Darga Star அனியினர் முதல் தடவையாக ஏற்பாடு செய்திருந்தனர்.


 அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இப்போட்டியில் நாட்டின் பல பாகத்திலிருந்தும் 20 அனிகள் பங்கு பற்றின. 2 நாட்களாக நடைபெற்ற இப்போட்டித்தொடரில் மாத்தளை கிரீன் ஸ்டார் A மற்றும் B அனியினர். அதேபோல் பதுள்ளை அல்பலாஹ் , பானந்துரை யாஹு எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு அனியினர் அரையிறுதி வாய்ப்பை பெற்றனர்.

 இருதியில் மாத்தளை கிரீன் ஸ்டார் A மற்றும் B அனியினர் இருதிப்போட்டிக்கு தெரிவாகி கின்னத்தை தம் வசப்படுத்திக்கொண்டனர்.
 உலமா கிரிகெட்டில் பல தடவை கின்னத்தை சுவீகரிது சாதனைகள் பலவற்றை நிலை நாட்டிய்ள்ள மாத்தளை கிரீன் ஸ்டார் அனி முதல் முறையாக சம்பியன் மற்றும் இரண்டாம் இடத்தை தம்வசப்படுத்தி உலமா கிரிகெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

போட்டித்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக கிரீன் ஸ்டார் அனியின் மெளலவி அமீன் அவர்களும் சிறந்த பந்து வீச்சாளராக அதே அனியின் மெளலவி ஜமீல் அவர்களும் தெரிவானார்கள்.

 எதிர் வரும் நவம்பர் மாதம் 19,20 ஆம் திகதிகளில் மாத்தளை கிரீன் ஸ்டார் அனியினால். உலமாக்களுக்கான கிரிகெட் போட்டித்தொடர் ஒன்று நடாத்தப்படவுள்ளது.

போட்டித்தொடரை அழகிய முறையில் ஒழுங்கு செய்த. Darga Star அனிக்கு மனமார்ந்த நன்றிகள்.

தகவல்
ரஸான். மாத்தரை (Southern worries அனி)
உலமா கிரிக்கட்டில் சாதனைபடைத்த மாத்தளை கிரீன் ஸ்டார் அணி. உலமா கிரிக்கட்டில் சாதனைபடைத்த மாத்தளை கிரீன் ஸ்டார் அணி. Reviewed by Madawala News on 10/24/2016 01:04:00 PM Rating: 5