ஏற்கனவே பங்களாதேஸ், நேபாளத்துக்கு வழங்குவது போல், இலங்கைக்கும் கடலுக்கு அடியிலான மின்சாரம் தருவதாக இந்தியா அறிவிப்பு.



இலங்கைக்கு கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்திய தயராகியுள்ளதாக அந் நாட்டு மின்சாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் பீ.கே.பூஜாரியை மேற்கோள் காட்டி இந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உள்ளுர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் இந்த கடலுக்கடியிலான பொருத்துக்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

ஏற்கனவே இவ்வாறான திட்டங்கள் பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பங்களாதேஸ், நேபாளத்துக்கு வழங்குவது போல், இலங்கைக்கும் கடலுக்கு அடியிலான மின்சாரம் தருவதாக இந்தியா அறிவிப்பு. ஏற்கனவே பங்களாதேஸ், நேபாளத்துக்கு வழங்குவது போல், இலங்கைக்கும் கடலுக்கு அடியிலான மின்சாரம் தருவதாக இந்தியா அறிவிப்பு. Reviewed by Madawala News on 10/11/2016 11:56:00 AM Rating: 5