Free Space

ஆவா குழு உறுப்பினர்கள் வாளுடன் கைது. #aawa

ஆவா குழு உறுப்பினர்கள் இருவரை யாழ்.பொலிஸார் இன்று(30) கைது செய்துள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் யாழ்ப்பாண பகுதியில் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வாள்கள் நாடகத்துக்கு பயன்ப்படுத்தப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது எவ்வாறாயினம் வாள் அதிக நீளமானதாக இருந்தமையினால் அது நாடகத்துக்கு பயன்ப்படுத்துவதற்கு பொருத்தமற்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சுன்னாகம் பகுதியில் ஆவா குழு, இரண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆவா குழு உறுப்பினர்கள் வாளுடன் கைது. #aawa ஆவா குழு உறுப்பினர்கள் வாளுடன் கைது. #aawa Reviewed by Madawala News on 10/30/2016 06:25:00 PM Rating: 5