அப்டேட்... அஷ்ஷெய்க் அகார் முஹம்மதின் துணைவியார் சுரையா அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம்.



(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

அஷ்ஷெய்க் அஹார் முஹம்மதின் துணைவியார் சுரையா அவர்கள் விபத்தில்  வபாத்தானது அறிந்ததே..

விபத்து நடந்தவுடன்  கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட ஜனாஸா அங்கிருந்து சற்றுமுன்னர் வெளியில் எடுக்கபட்டு மாவனல்லைக்கு கொண்டு செல்லபடுவதால் அன்பர்கள் யாரும் கம்பளைக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்ர்கறீள்.

48 வயதுடைய திருமதி சுரையா மூன்று பிள்ளைகளின் தாயாவார்

பகலுணவுக்காக வாகனத்தை வீதியோரம் நிறுத்திவிட்டு அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகம்மத்  அவர்களும் அவர்களோடு பயணித்தவர்களும் உணவகம் ஒன்றுக்குச் சென்றுள்ளனர். எனினும் அவரது பாரியார் மாத்திரம் காருக்குள் இருந்துள்ளார்.

இந் நிலையில் பின்புறமாக வந்த  லொறி ஒன்று காருடன் மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜனாஸா நாளை மாவனல்ல  ஹிங்குல்ல ( AluthNuwara Road, Hingula, Mawanella)   அவரது இல்லத்திலிருந்து தெல்ஹொட முஸ்லிம் மையவாடியில் (31) இன்ஷா அல்லாஹ்  நாளை அஸர் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவர் ஊடகவியலாளர் சி.எம்.ஏ.அமீனின் சகோதரியும் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீனின் நெருங்கிய குடும்ப உறுப்பனிருமாவார்.
அப்டேட்... அஷ்ஷெய்க் அகார் முஹம்மதின் துணைவியார் சுரையா அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம். அப்டேட்... அஷ்ஷெய்க் அகார் முஹம்மதின் துணைவியார் சுரையா அவர்களின் ஜனாஸா நல்லடக்க விபரம். Reviewed by Madawala News on 10/30/2016 07:24:00 PM Rating: 5