Ad Space Available here

உலக புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை முற்றாக இடைநிறுத்த சதி .அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று


உலகின் மிக பழமையான இந்தியாவின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒரு பழமையான கல்வி நிறுவனம். 1875ம் ஆண்டு நிறுவப்பட்டதாகும். முதலில் அதன் பெயர் ஆங்கிலோ ஓரியண்டல் லேஜ் என்பதுதான்.


பிறகு 1920ம் ஆண்டு தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.அதே 1920ம் ஆண்டுதான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து ஜமியா மில்லியா இஸ்லாமியா என்ற வேறொருகல்வி நிறுவனம் தில்லியில் துவக்கப்பட்டது. இந்தக்கல்வி நிறுவனம் 1962ம் ஆண்டு Deemed University  என்ற அந்தஸ்தைப் பெற்றது. மேலும் இந்த நிறுவனம் மத்திய பல்கலைக்கழகம் என்ற தகுதியை 1988ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட சிறப்புச்சட்டம் மூலம் பெற்றது. அதோடு 2011ம்ஆண்டில் சூயவiடியேட உடிஅஅளைளiடிn கடிசஆinடிசவைல நுனரஉயவiடிn ஐளேவவைரந மூலம் மத்திய பல்கலைக்கழகம் மத சிறுபான்மை என்கிற தகுதியையும் பெற்றது.அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று இன்று உருவாகியுள்ள நிறுவனத்தை முதலில் தோற்றுவித்தவர் ‘சர் சையத் அகமத்கான்’ என்பவர். இவர் பிரபல கல்விமான், அரசியல்வாதியும் கூட.


இவருடைய சிந்தையில் இந்துக்களும், முஸ்லிம்களும் இந்தியா என்னும் அழகிய பெண்ணின் இருகண்கள் என வர்ணித்துள்ளார்.இந்து என்று சொல்லுகின்றவர்களும், எங்கிருந்தோ வந்து இங்கு குடியேறியவர்கள்தான். நாங்களும் அப்படி இந்தியாவுக்கு வந்துகுடியேறியவர்கள்தான். எங்கள் இருவருக்குமே நாங்கள் வந்த எங்களின் புராதான இடங்கள் மறந்து போயின. இருவருமே இப்போதுஇந்தியாவின் காற்றைத் தான் சுவாசிக்கிறோம். கங்கையின் யமுனையின் நீரைத்தான்பயன்படுத்துகிறோம். இந்த பூமியில் உருவாகும்பொருளைத்தான் நுகருகிறோம், இங்குதான் வாழ்கிறோம், இங்குதான் சாகிறோம்.உடலின் நிறமும், முகமும் கூட பல நூற்றாண்டுகளில் எவ்வளவோ மாறிப்போயின. எங்களின் கலாச்சாரங்களில் பல ஒன்றோடொன்று கலந்து போயின.


இந்தியாவில் ஒரு புதுமொழி உருது உருவாகி விட்டது. நாங்கள் இருவருமே கூட இதை பேசுகிறோம். இருவருக்கும் இடையில் ஒத்துழைப்பு, அன்பு நேசம்தேவை. ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டால்இந்தியா எனும் அழகிய பெண்- அவளின் முகம் கெட்டுப்போகும், இப்படியாக இவர் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக உழைத்தவர்.ஆங்கியேலர் ஆட்சியில் இந்தியாவில் இருந்த பெரும்பாலான முஸ்லிம்கள் ஆங்கிலத்தை படிக்க விரும்பவில்லை. இதை சர் தையத் அகமத்கான் ஏற்கவில்லை.

கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் முஸ்லிம்கள் மாற வேண்டும், ஆங்கிலம் கற்க வேண்டும், நவீன விஞ்ஞானத்தை அறிய வேண்டும் எனஎண்ணினார். அந்த வேட்கைதான், அவருடைய முயற்சியால் ஆங்கிலோ ஒரியண்டல்காலேஜ் உருவானது. நாடு பூராவும் அலைந்துதிரிந்து நிதி திரட்டி கல்லூரியை உருவாக்கினார். அதுதான் இப்போது கம்பீரமாக அலிகார்முஸ்லிம் பல்கலைக்கழகம் என செயல்படுகிறது.இந்தியாவின் மூன்றாவது ஜனாதிபதியான ஜாகிர் உசேன் அலிகார் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தவர்.


ஜமியா மில்லியா இஸ்லாமியர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்தவர்.141 ஆண்டுகள் வரலாறு கொண்ட அந்தசிறுபான்மை இஸ்லாமியரின் பல்கலைக்கழகத்தை இன்றைக்கு ஆட்சிக்கு வந்துள்ள இந்துத்துவா ஆட்சியர் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இந்த முயற்சி அரசியல் சட்டத்துக்கு முரணானது, அடிப்படை உரிமைக்கே அநீதியானது. பாஜக அரசு- அந்த அரசின் சட்ட ஆலோசகர் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கிசொல்லுவது: அந்தப்பல்கலைக்கழகத்துக்குள்ள சிறுபான்மை அந்தஸ்து நீக்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். மத்தியில் உள்ளஅரசு ஒரு சிறுபான்மை அந்தஸ்து என்ற பெயர்தாங்கியுள்ள ஒரு நிறுவனத்தை வெறுமென பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


காரணம் இது ஒரு மதச்சார்பற்ற அரசு என்று நீதிமன்றத்தில் வாதிடுகிறார்.மதச்சார்பற்ற என்ற வார்த்தையையே விரும்பாத அரசு அந்த வார்த்தையையே ஒழிக்க வேண்டும் என்று வேட்கை கொண்ட அரசு இப்போது அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழக பிரச்சனையில் தன்னை மதச்சார்பற்ற அரசு என வஞ்சனையான நோக்கத்தோடு பயன்படுத்திக் கொள்கிறது.இங்கே ஒரு துயரம் என்னவென்றால அசிஸ் பாஷாவுக்கும் மத்திய அரசுக்கும் ((Azees ‘asha Vs Union of India Case’ AIR 1968 Sec.662)) நடந்த ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பாதகமான ஒரு தீர்ப்பை வழங்கி விட்டது. அதாவது சிறுபான்மை அந்தஸ்து என்பது அடிபட்டு போகும்படி தீர்ப்பு வழங்கி விட்டது. அரசியல் சட்டத்தில் உள்ள -(ஹணநநள ‘யளாய ஏள ருniடிn டிக ஐனேயை ஊயளந’ ஹஐசு 1968 ளுநஉ.662) என்ற வார்த்தையை தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டது. அரசே சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவது போல, உருவாக்குவது போல எடுத்துக் கொண்டு, (நுளவயடெiளா யனே யனஅinளைவசயவந நனரஉயவiடிn iளேவவைரவiடிn)’ சட்டப்பிரிவு 30(1)உள்ளபடி மதச்சார்பற்ற அரசு எப்படி மத கல்விநிறுவனத்தை உருவாக்கலாம் என்ற கருத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது நடந்தது 1967ம் ஆண்டு. ஆனால், மத்திய அரசு மீண்டும் திருத்தம் கொண்டு வந்து உச்சநீதிமன்றம் அளித்த குளறுபடிகளை சரி செய்து மீண்டும் சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனம் என்பதை மீட்சி செய்தது.


 மீண்டும் துயரம்என்னவென்றால் அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுபடியும் நாடாளுமன்றம் மூலம் வழங்கப்பட்ட, திருத்தப்பட்ட சட்டத்தை ரத்து செய்துவிட்டது. மேலும், அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை எதிர்த்து அலிகார்முஸ்லிம் பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது.அரசியல் சட்டம் சிறுபான்மையினரின் கலாச்சாரம், மொழிவாரி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ள உரிமையை உறுதி செய்கிறது. அரசியல் சட்டம் 30(1) சொல்லுவது : – சிறுபான்மை கல்வி நிறுவனம் உருவாக்கப்படவும், நிர்வகிக்கவும் உரிமையளிக்கிறது.

அரசியல் சட்டம் 29(1)தரும் உரிமை

சிறுபான்மையினருக்கான கலாச்சாரம், கல்வி – இரண்டின் உரிமையையும் உறுதி செய்கிறது.இந்தியாவில் இந்திய குடிமகன் எங்கு வாழ்ந்தாலும் அவனுடைய தனி மொழி, எழுத்து, கலாச்சாரம் – முதலியவைகளைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு என்று சட்டம்சாற்றுகிறது. அடிப்படை உரிமையை உறுதிபடுத்தும் பகுதியில் அரசியல் சட்டம் 15(1) கூறுவது:மதம், சாதி, இனம், பால், வர்க்கம் என்ற அடிப்படையில் எந்தக் குடிமகனையும் வித்தியாசமாகப் பார்ப்பதை தடை செய்கிறது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என சங்க நாதம் முழங்குகிறது.

இப்படிப்பட்ட முற்போக்கு சட்டங்கள் உருவாக்கப்பட்ட போது இவைகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் வராமல் போகவில்லை. இவையெல்லாம் கடுமையான விவாதத்துக்கு உட்பட்டுதான் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவையெல்லாம் அரசியல் சட்ட புத்தகத்தை அழகுபடுத்தினாலும், இஸ்லாமியர்களைப் பொறுத்த மட்டில், சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் ஆன பின்பும் இந்தியாவில் அவர்கள் இன்னமும் கல்வி ரீதியாக, வேலைவாய்ப்பு ரீதியாக, பொருளாதார ரீதியாக, பின்தங்கிய நிலையில்தான் உள்ளார்கள்.

சர்க்காரியா கமிஷன் இவைகளை ஆதாரங்களோடு எடுத்துக் காட்டுகின்றன.இந்த நிலையில், பாஜக அரசு முஸ்லிம்களின் வறிய நிலையை மேலும் வாட வைக்க வாகை சூடி அலைகிறது. அந்த முயற்சியில் ஒன்றுதான் கல்வி நிறுவனங்களில் அவர்களின் சிறுபான்மை அந்தஸ்தையே அழித்தொழிக்க அலைகிறது.ஒரு கல்வி நிறுவனத்துக்கு எந்த சட்டஅடிப்படையில் சிறுபான்மை கல்வி நிறுவனம்என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.

 National Commission for Minority Educational Institution Act என்ன சொல்கிறது?

ட கல்வி நிறுவனம் மத சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் உருவாக்கப்பட வேண்டும்.ட அப்படி உருவாக்கப்படும் கல்வி நிறுவனம் சிறுபான்மையைச் சேர்ந்த சமூகத்துக்கு பயன்படுவதாக இருக்க வேண்டும்.


இந்தக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் மத சிறுபான்மையினரால்தான் நடத்தப்பட வேண்டும். இந்த 3 அந்தஸ்துகளின் விதிகளும் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.ஆக மத கல்வி நிறுவனங்கள் அரசால்உருவாக்கப்பட்டவை அல்ல, சிறுபான்மையினர், ஒரு கல்வி நிறுவனங்களை உருவாக்குகிற போது, விடா முயற்சி, உழைப்பு, அதற்கானநிதி ஆதாரம் திரட்டுவது இப்படி பல சிரமங்கள் உண்டு. ஆரம்ப காலத்தில் ஜமியா மில்லா இஸ்லாமிய கல்வி நிறுவனம் உருவான காலத்தில் நிதி ஆதாரம் திரட்டுவதில் பலநெருக்கடிகளைச் சந்தித்த போது இதைக் கண்ட மகான் மகாத்மா காந்தி உங்களுக்கு இந்தநிறுவனத்தை உருவாக்க நிதி நெருக்கடி என்றால் நான் தட்டேந்தி ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுத்து நிதி திரட்டித்தருகிறேன் என்றார், இப்படிப்பட்ட தலைவர் வாழ்ந்த இந்தியாவில்தான் சிறுபான்மை கல்விநிறுவனம் என்றஅந்தஸ்தை ஒழிக்க பாஜக ஆட்சி ஆலாய் பறக்கிறது.எனவே மத கல்வி நிறுவனங்களை, மத சிறுபான்மையினர்தான் உருவாக்குகிறார்கள், அரசாங்கம் என்ன செய்கிறது. ஏற்கெனவேஇயங்கும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலைக்கழங்களுக்கு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அங்கீகாரம் அளிக்கிறது. அவ்வளவே, அதுவும் அரசியல் சட்டத்தில்ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டங்களின் அடிப்படையில்தான் அங்கீகாரம் அளிக்கிறது.இந்த சட்ட உரிமைகளைக் கண்டு கொள்ளாமல், பாஜக அரசு மதச்சார்பற்ற அரசு, எனவேசிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தைஒரு மதகல்வி நிறுவனத்துக்கு தர முடியாது என்று சொல்லுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

ஆட்சி மாறுகிற போதெல்லாம் அவர்களின் அஜண்டாவுக்கு ஏற்றார்போல் மற்றவர்களும் ஆட வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒருவித எதேச்சதிகாரம்.ஏற்கனவே இதுபோன்ற பல சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் (கிறிஸ்தவர்கள் உட்பட) பல மாநிலங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் சென்று அரசியல் சட்ட விதி 30(1) படி சாதகமான தீர்ப்புகள் பெற்றுள்ளனர்.

ஆனால் அவையெல்லாம் பாஜக மத்தியில் ஆட்சியில்இல்லா காலங்களில் உரிமை பெற்றவை. இப்போது பாஜக அரசு அலிகார் முஸ்லிம்பல்கலைக்கழகத்தை தீண்டி பார்க்க முயற்சிக்கிறது. இந்த முயற்சியில் அதுவெற்றியடையக் கூடாது. இதற்கு உச்சநீதிமன்ற சாதகமான தீர்ப்பு மட்டுமல்ல, இந்திய ஜனநாயக சக்திகளும் ஓரணியாய் எழுந்து நின்று பாஜகவின் வஞ்சக முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
உலக புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை முற்றாக இடைநிறுத்த சதி . உலக புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை முற்றாக இடைநிறுத்த சதி . Reviewed by Madawala News on 10/22/2016 09:13:00 PM Rating: 5