இஸ்ரேலுக்கு எதிரான பிரேரணைக்கு வாக்களிக்காமல் விடுமாறு உத்தரவிட்டது யார்?



(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்­கிய நாடு­களின் யுனெஸ்கோ அமைப்பு இஸ்­ரே­லுக்கு எதி­ராக கொண்­டு­வந்த பிரே­ர­ணைக்கு வாக்­க­ளிக்­காமல் விடு­மாறு யார் உத்­த­ர­விட்டார் என்­பதை அர­சாங்கம் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும் என முஸ்லிம் முற் போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­பரும் முன் னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இது­ தொ­டா்­பான பிரே­ர­ணை­யொன்றை எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்வில் கூட்டு எதிர்க்­கட்சி கொண்­டு­வ­ர­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடு­களின் யுனெஸ்கோ அமைப்பின் பிரே­ர­ணைக்கு அர­சாங்கம் வாக்­க­ளிக்­காமல் இருந்­தமை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அவ்­வி­டயம் தொடர்­பாக தொடர்ந்து கூறு­கையில், அல் அக்ஸா புனி­த­பூமி பலஸ்­தீ­னுக்கு சொந்­த­மா­னது. அந்த பிர­தே­சத்தில் இருந்து இஸ்ரேல் வெளி­யே­ற­வேண்டும் என தெரி­வித்து யுனெஸ்கோ கொண்டு வந்த பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் வாக்­க­ளிக்­காமல் வெளி­யே­றி­யுள்­ளது. இது முஸ்­லிம்­களின் மனதை புண்­ப­டுத்தும் செய­லாகும். அத்­துடன் அணி­சேரா கொள்­கைக்கு பெருத்த அடி­யாகும்.

மேலும் சிறிமா பண்­டா­ர­நா­யக்க, ஆர் பிரே­ம­தாஸ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ் போன்ற தலை­வர்கள் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வா­கவே செயற்­பட்­டுள்­ளனர். அத்­துடன் இலங்­கையில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இஸ்ரேல் நலன் காப்பு பிரிவை முஸ்­லிம்­களின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க சிறிமா பண்­டா­ர­நா­யக்க அதனை நீக்­கி­விட்டார். மஹிந்த ராஜ­பக் ஷ்வும் அதனை கடைப்­பி­டித்து வந்தார்.

ஆனால் இந்த அர­சாங்கம் மீண்டும் அதற்கு அனு­ம­தி­ய­ளிப்­ப­தற்கு திட்­ட­மிட்டு வரு­கின்­றது. அத்­துடன் இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக் ஷ் அர­சாங்­கத்தில் ஐக்­கிய நாடுகள் சபையில் பலஸ்­தீ­னுக்கு ஆத­ர­வான பிரே­ரணை வந்­த­போது இன்று வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருக்கும் மங்­கள சம­ர­வீ­ரவே அன்றும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்து ஐக்­கிய நாடுகள் சபையில் அந்த பிரே­ர­ணைக்கு வாக்­க­ளிக்­காமல் வெளி­யே­று­மாறு பிர­தி­நி­திக்கு உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

அதன் கார­ண­மாக மஹிந்த ராஜபக் ஷ் வெளி­வி­வ­கார அமைச்சை அவ­ரி­ட­மி­ருந்து மாற்­றி­விட்டார்.  ஸியோ­னிச, அமெ­ரிக்க நாடு­களின் பக்கம் இணைந்து இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வாக செயற்­படும் வெளி­வி­வ­காரமைச்சர் மங்­கள சம­ர­ வீ­ரவை ஜனா­தி­பதி மைத்­த­ரி­பால சிறி­சே­னவும் வெளி­வி­வ­கார அமைச்சில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்­ப­துவே முஸ்­லிம்­களின் கோரிக்­கை­யாகும்.

அத்­துடன் இது தொடர்­பான பிரே­ர­ணை­யொன்றை எதிர்­வரும் பாரா­ளு­மன்ற அமர்வில் கொண்­டு­வ­ரு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி திட்­ட­மிட்­டுள்­ளது. அதே­போன்று பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் இது­ தொ­டர்­பான பிரே­ர­ணை­யொன்றை கொண்­டு­வ­ர­வுள்­ளனர்

எனவே ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணைக்கு வாக்களிக்கக்கூடாது என உத்தரவிட்டது ஜனாதிபதியா அல்லது பிரதமரா என்ற கேள்விக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அத்துடன் இது தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பவேண்டும் என்றார்.

இஸ்ரேலுக்கு எதிரான பிரேரணைக்கு வாக்களிக்காமல் விடுமாறு உத்தரவிட்டது யார்? இஸ்ரேலுக்கு எதிரான பிரேரணைக்கு வாக்களிக்காமல் விடுமாறு உத்தரவிட்டது யார்? Reviewed by Madawala News on 10/22/2016 12:51:00 PM Rating: 5