பெற்றோர்களே.. என் கண்களால் கண்ட சில காட்சிகள் தான் இன்று என்னை இப்படி எழுத வைத்தது..



( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )

இன்றைய நவீன காலத்தின் நவீன தெழில்நுட்ப சாதனங்களின் வருகையினால் பல சொல்ல முடியா கேவலமான செயல்கள் இந்த உலகத்தில் நடந்த வன்னமுள்ளன.

இந்த ஆபத்தான கட்டத்தில் பெற்றோர்கள் கவனமாக தங்களது பிள்ளைகளை பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம்! 

இன்று சிறுபிள்ளைகள் கூட காதல் என்ற  வலையில் சிக்கி எமது முஸ்லிம் சமூகத்தின் புனிதத் தன்மையினை இழக்கச் செய்கின்றனர் அது மாத்திரமன்றி பெற்றோரின் மானத்தை சந்தி சிரிக்க வைத்துவிடுகின்றனர்.

இதுவெல்லாம் எப்படி நடக்கிறது இதற்க்கு யார் காரணம் ?

நான் என் கண்களால் கண்ட சில காட்சிகள் தான் இன்று என்னை இப்படி எழுத வைத்தது.

கடந்த சில நாட்களுக்க முன்னர் எனது வேலையினை முடித்து விட்டு வீடு செல்லும் வழியில் ஓர் அதிர்ச்சி தரக்கூடிய விடயம் ஒன்றை பார்த்தேன்.

அது பாடசாலை நிறைவடையும் நேரம் மாணவர்கள் சென்றுகெண்டிருக்கையில் யாருமில்லாத ஒரு வீதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண் பிள்ளை பாடசலை உடையுடன் நிற்கிறாள் அதே வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிலில் நிற்கிறார்.அவர் ஏதோ ஒன்றை பிள்ளையிடம் கொடுக்க பிள்ளை வேண்டாம் என்று சொல்ல அவர் பிள்ளையின் கையினை பிடித்து சில்மிசம் செய்கிரார் இதற்க்கு வீதியில் யாரும் வருகிறார்களா என்று பார்க்க நான்கு தோழிகள் காவல் காக்கின்றனர்.

இது ஒரு சம்பவம் தான்..

இன்னும் சில விடையங்களைப் பாருங்கள் காலை மாலை நேர வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகளின் ஒரு சில அய்யோ அது படு கேவலம் பா ..!

பாடசாலை தவிர்த பகுதி நேர வகுப்புகளுக்கு செல்வதாக சொல்லிவிட்டு அங்கு சென்று தனது அந்தரங்க காதலனோடு சற்று கூட வெட்கம் இல்லாமல் தங்களது குடும்பத்தின்  மரியாதை என்னவாகும் என்ற கவலை சற்று கூட இல்லாமல் தனது காதலேனாடு மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டு பொது இடங்களுக்கு பேகிறார்கள்.

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை பெற்றோர்கள் எடுக்க தவறினால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாலாய் போய் விடும் .

பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மீது அதிக அன்பு கொண்டு எனது பிள்ளை இப்படியான வேலைகளை செய்யமாட்டார்கள் என பாராமுகமாக இருந்து விடாமல் சற்று பிள்ளையின் மீது கண்காணிப்பாக இருந்து கொள்ளுங்கள்.


முதலாவதாக எமது பிள்ளையின் அன்றாட நடவடிக்கையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என பாருங்கள் இது கட்டாயம்.

பாடசாலை அல்லது பகுதி நேர வகுப்பிற்கு வழமைக்கு மாற்றமாக நேரத்தோடு செல்கிறாளா என பாருங்கள்.

உங்களது பிள்ளைகளுக்கு தனியான பொருட்கள் வைக்கும் இடம் இருந்தால் அதனை அடிக்கடி பாருங்கள்.

பிள்ளைகளை நீங்களே பாடசாலை அல்லது பகுதி நேர வகுப்பிற்கு அழைத்துச் செல்லுங்கள் இது மிகச்சிறந்தது.

உங்களது பிள்ளைகளை சந்தேகப்பட சொல்ல வில்லை மாறாக சற்று கண்கானிப்பாக இருங்கள் என்று சொல்கிறேன் ........

இறைவன் துணை.
பெற்றோர்களே.. என் கண்களால் கண்ட சில காட்சிகள் தான் இன்று என்னை இப்படி எழுத வைத்தது.. பெற்றோர்களே.. என் கண்களால் கண்ட சில  காட்சிகள் தான் இன்று என்னை இப்படி எழுத வைத்தது.. Reviewed by Madawala News on 10/31/2016 05:49:00 PM Rating: 5