Free Space

'லிவிங் டு கெதர்' கணவன், மனை­வியை கோடரியால் அடித்­துக் ­கொன்றுவிட்டு சட­ல­மாகவும் மீட்பு. மாத்தளையில்...



மனை­வியை கோட­ரியால் அடித்து கொலை செய்த கணவன் நேற்­று­முன்­தினம் சட­ல­மாக கண்டு­பி­டிக்­கப்­பட்ட சம்­பவம் மாத்­தளை அல­வத்த என்ற இடத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்­சம்­ப­வத்தில் மஞ்­சுளா நிஸந்­த­லாவ வயது 18 என்ற பெண்ணே கோட­ரியால் வெட்டி கொல்­லப்­பட்­ட­வ­ராவார்.

இக்­கொ­லைச்­சம்­பவம் கடந்த 29 ஆம் திகதி மாலை நிகழ்ந்­துள்­ளது. குடும்­பத்­த­க­ராறு கார­ண­மாக கணவன் மனைவியிடையே ஏற்­பட்ட வாக்­கு­வாதம் முற்­றி­யதால் ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் மனை­வியை கோட­ரியால் வெட்டி கொலை­செய்­துள்ளார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வந்த நிலையில் சம்­பவ தினத்தின் பின் தலை­ம­றை­வான பெண்ணின் கணவன் குமா­ர­கு­ண­ரத்ன வயது 37 நேற்­று­முன்­தினம் மாலை அவ­ரது வீட்டின் பின்­புறம் உயி­ரி­ழந்த நிலையில் சட­ல­மாக கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

மேற்­படி உயி­ரி­ழந்த இருவரும் சட்டரீதியாக திருமண பதிவுசெய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் எனவும்  விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
'லிவிங் டு கெதர்' கணவன், மனை­வியை கோடரியால் அடித்­துக் ­கொன்றுவிட்டு சட­ல­மாகவும் மீட்பு. மாத்தளையில்... 'லிவிங் டு கெதர்' கணவன்,  மனை­வியை கோடரியால் அடித்­துக் ­கொன்றுவிட்டு சட­ல­மாகவும்  மீட்பு. மாத்தளையில்... Reviewed by Madawala News on 10/03/2016 09:58:00 AM Rating: 5