நீர் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் !


நீர் கட்டணங்கள் பரீசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அதிகரிக்கப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

(29.9.2016 திகதி மாலை) கட்டுகாஸ்தோட்டையில் இடம் பெற்ற ஊடக செயலமர்வு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் 
நீர் பட்டியல் கட்டணமானது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பரீசீலனை செய்யப்படுவது வழக்கம் ஆனால் கடந்த நான்கு வருடங்களாக இது பரீசீலனைக்கு உட்படுத்தப்படவில்லை.

அது தவிர கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தலை இலக்கு வைத்து நீர் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது . அதனால் நீர்வடிகாலமைப்பு சபைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது அந்த விலை பட்டியல் குறைப்புடனயே நாம் தொடர்ந்து சேவையை வழங்கி வருகிறோம் என குறிப்பிட்டார்.

இலங்கையில் 20 லட்சத்துக்கு அதிகமான நீர் இணைப்புக்கள் வழங்கப்படுள்ள அதேவேளை இவர்களில் 90 சதவிகிதமானவர்கள் வீட்டு பாவணையாளர்களாவர். 
நீர் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் ! நீர் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் ! Reviewed by Madawala News on 9/30/2016 11:33:00 PM Rating: 5