Accaddemy

எதிர்மறை விளைவுகளை தரும் உளவளத்துக்கு எதிரான புலமை பரிசில்


5ம் ஆண்டு புலமை பரிசில் Result, #சில பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியளித்தாலும்! #பல்லாயிரம் பிள்ளைகளின் மனதில் விரக்தியையும் கல்விமீது வெறுப்பையும், தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குகிறது. 

ஓடியாடி விளையாடிக் கொணடிருந்த பிள்ளை Result ஐ பார்க்க ஓடி வந்து ஆர்வமாய் நின்று! Result ஐப் பார்த்ததும் துக்கமாய் ஓடிச் சென்று பட்டினியுடன் படுக்கிறது. 

மாதரிப் பரீட்சையில் எடுத்த புள்ளியில் அரைவாசியும் கிடைக்காத Result இன் அதிர்ச்சியால்! இலட்சியத்தை மறந்து அவநம்பிக்கை எனும் மாலையை சூடிக்கொள்ள ஆரம்பிக்கிறது. 

பாதை நெடுகிலும் "உங்களது  Result என்ன?" எனும் கேள்விக்குப் பயந்து.... வெட்கித்து வீட்டினுள் அடங்குகிறது. அந்தோ பரிதாபம்.. துள்ளியோடிய மான் கட்டிலில் அழுது கொண்டு.... 

நாளை விடிந்ததும் வைத்தியசாலைகளில் எத்தனையோ தாய்மார் அனுமதிக்கப் படுவார்கள். தன் பிள்ளை சி்த்தியடையவில்லை என்பதற்காக நஞ்சு அருந்தியவர்களாக. 

எத்தனையோ பிள்ளைகளுக்கு மறுந்து கட்டப் படும். சித்தியடையவில்லை என்பதற்காக மௌடீக பெற்றார்களால் தண்டிக்கப் பட்டமைக்காக. 

எத்தனையோ மாணவர்களது தாய்மார்களுக்குள் பகை ஏற்படும். பொறாமை எனும் தீயால்.

#ஒழிக்கப்_படவேண்டிய உளவளத்துக்கு எதிரானதோர் கல்வி முறைமையே ஐந்தாம் ஆண்டு குழந்தைகளுக்கான புலமை பரிசிலாகும்.
இவண்:- அபூ ஸுமையா
எதிர்மறை விளைவுகளை தரும் உளவளத்துக்கு எதிரான புலமை பரிசில் எதிர்மறை விளைவுகளை தரும் உளவளத்துக்கு எதிரான புலமை பரிசில் Reviewed by Madawala News on 10/05/2016 11:37:00 AM Rating: 5