Kidny

Kidny

மாகாணங்களுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்கவேண்டும்..


(ஆர்.யசி) 
மாகாணங்களுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்கவேண்டும் என்கிறார் ஜயம்பதி

''மாகாண சபைகள் பலமாக செயற்பட வேண்டியது அவசியம்''

மத்­திய அரசின் ஆதிக்­கத்­திற்கு உட்­பட்ட  வகையில் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். மாகாண சபைகள் சுயா­தீ­ன­மா­கவும் பல­மா­ன­தா­கவும் செயற்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­த­ வேண்டும். 

மாகாண சபைகள் பிரி­வி­னை­யினை பலப்­ப­டுத்தும் வகையில் அமையும் பட்­சத்தில் மத்­திய அர­சாங்கம் நேர­டி­யா­கவே மாகா­ணங்­களை கலைக்கும் அதி­கா­ரங்­கள் புதிய அர­சியல் அமைப் பில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்து வரும்  பிர­தான வழி நடத்தல் குழுவின் உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசிய பட்­டியல் எம்.பி.யுமான கலா­நிதி ஜயம்­பதி விக்­கிர­ம­ரத்ன தெரி­வித்தார்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள்

 இணைப்பு வெறும் அர­சியல் சுய­லா­ப­மாக அமை­யாது. மக்­களின் பூரண ஆத­ர­வுடன் அமை­யு­மாயின் ஏற்­றுக்­கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ராஜ­கி­ரி­யவில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்

அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு தொடர்பில் அர­சாங்கம் அதிக அக்­கறை செலுத்தி வரு­கின்­றது. கடந்த காலங்­களில் நாட்டில் இடம்­பெற்ற மோச­மான நிலை­மைகள் மற்றும் அர­சியல் சூழல் மாற்­றப்­பட வேண்டும் என்­பதில் தேசிய அர­சாங்கம் மிகவும் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. கடந்த ஆண்டு ஜன­வ­ரியில் மக்­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யக மாற்றம் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். அதற்­கான பிர­தான நகர்­வா­கவே இந்த அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு என்ற விடயம் கையா­ளப்­ப­டு­கின்­றது. மேலும் மறு­சீ­ர­மைப்பு தொடர்பில் ஆராய சகல தரப்­பி­னதும் ஒத்­து­ழைப்­புகள் கிடைத்­துள்ள நிலையில் உப குழுக்­களின் அறிக்­கையும் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் தற்­போது ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு மிகவும் மெது­வாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் மெது­வாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக ஒரு­சிலர் கூறு­கின்­றனர் அதே­நி­லையில் இந்த நகர்­வுகள் மிகவும் விரை­வாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக இன்னும் சிலரால் விமர்­சிக்­கப்­ப­ப­டு­கின்­றது. ஆனால் இந்த இரண்டு விமர்­ச­னங்­க­ளையும் நான் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன். சரி­யான நகர்வில் இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நாட்டின் மிகவும் முக்­கி­ய­மான ஒரு நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்கும் போது அதை அவ­ச­ரப்­பட்டோ அல்­லது காலத்தை கடத்­தியோ முன்­னெ­டுக்க முடி­யாது. முழு­மை­யாக ஆராய்ந்து சரி­யான வகை­யி­லேயே இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கேள்வி:- புதிய அர­சியல் அமைப்பில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டுமா? அதை உறு­திப்­ப­டுத்­தியா உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது?

பதில்:- நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட வேண்டும் என்­பது ஆரம்­பத்தில் இருந்தே முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அதே நிலைப்­பாட்டில் உள்ளார். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டு­வது ஒரு­புறம் கையா­ளப்­பட்டு வரும் நிலையில் மறு­புறம் அதற்கு மாற்­றாக எவ்­வா­றான அதி­கார முறைமை கொண்­டு­வ­ரு­வது என்­ப­தையும் ஆராய வேண்டும். 1978ஆம் ஆண்­டுக்கு முன்னர் இருந்­ததை போன்று வெஸ்ட்­மி­னிஸ்டர் முறைமை போன்­றதா அல்­லது வேறு முறை­மைகள் கையாள்­வதா என்­பது இன்றும் தீமா­னிக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி:- புதிய அர­சியல் அமைப்பில் சமஷ்டி உள்­வாங்­கப்­ப­டுமா?

பதில்:- சமஷ்டி என்ற எண்­ணக்­கரு இலங்­கையில் இன்று நேற்று முன்­வைக்­கப்­பட்ட ஒன்­றல்ல. 1926ஆம் ஆண்டில் இருந்தே சமஷ்டி எண்­ணக்­கரு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் 1947ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஷ்டி என்ற எண்­ணக்­க­ருவை முன்­வைத்­துள்­ளனர். எனினும் 1956ஆம் ஆண்டு தமிழ் மக்­களே அந்த நிலைப்­பாட்டில் இருந்து விலகி சமஷ்­டியை நிரா­க­ரித்­தனர். இப்­போது மீண்டும் சமஷ்டி என்­பது தலை­தூக்­கி­யுள்­ளது. தமிழ் மக்கள் சமஷ்­டியை கேட்­கின்­றனர் இசிங்­க­ள­வர்கள் அதை எதிர்க்­கின்­றனர் என்­ப­தெல்லாம் வெறும் அர­சியல் நிலைப்­பாடு மட்­டு­மே­யாகும். உண்­மையில் சமஷ்டி என்ற பதம் என்­ன­வென்­பதை விளங்­கிக்­கொண்டு அதற்­க­மைய செயற்­பட வேண்டும். எவ்­வாறு இருப்­பினும் ஐக்­கிய இலங்­கைக்குள் அதி­கா­ரப்­ப­கிர்வு என்­பது ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும். இன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கூட அவ்­வா­றன நிலைப்­பாட்டில் உள்­ளது. நாடு பிள­வு­ப­டாத வகையில் அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும். சமஷ்டி என்ற பெயரில் நாட்டில் பிரி­வி­னை­யினை ஏற்­ப­டுத்தும் எந்த நகர்­வு­க­ளுக்கும் அர­சியல் அமைப்பில் இடம் இல்லை.

கேள்வி:- மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் வழங்­கப்­படும் நிலையில் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் எவ்­வாறு கையா­ளப்­படும்?

பதில்:- மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் பகி­ரப்­படும் நிலையில் குறிப்­பாக மாகா­ணங்கள் சுயா­தீ­ன­மாக செயற்­பட இட­ம­ளிக்­கப்­பட வேண்டும். பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும். மாகாண எல்­லைக்குள் தமக்­கான அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்த அனு­ம­திப்­பது மாகா­ணங்­களில் சுயா­தீ­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் அமையும். எனினும் மத்­திய அரசின் கட்­டுப்­பாட்டின் கீழ் மாகா­ணங்­களை இவ்­வாறு செயற்­பட அனு­ம­திக்க முடியும். சில சந்­தர்ப்­பங்­களில் மாகாண சபைகள் பிரி­வி­னை­யினை பலப்­ப­டுத்தும் வகையில் அமை­யு­மாயின் அல்­லது தனித்து செயற்­பட ஆரம்­பிக்­கு­மாயின் மத்­திய அரசின் நேர­டி­யான தலை­யீட்டில் மாகா­ணங்­களை கலைக்­கவும் ஏற்­பா­டுகள் அர­சியல் அமைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பில் பெளத்த மதம் பாதிக்­கப்­ப­டு­வ­தாக ஒரு­சிலர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். இது எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கின்­றது?

பதில்:- இலங்­கையின் அர­சியல் அமைப்பில் பௌத்தம் பிர­தான மத­மாக கூறப்­பட்­டுள்ள போதிலும் இலங்­கையின் அரச மதம் என குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. பௌத்த மதத்­திற்கு இருக்கும் அனைத்து உரி­மை­களும் என மதங்­க­ளுக்கும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பது ஆரம்­பத்தில் இருந்தே சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. பாகிஸ்தான்இ சவுதி அரே­பியா போன்ற நாடு­களில் அரச மத­மாக இஸ்லாம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் இலங்­கையில் அவ்­வாறு அல்ல. ஆகவே இதை புரிந்­து­கொள்ள வேண்டும். அதே­நி­லையில் பிர­தான மதம் என்ற அந்­தஸ்து எப்­போதும் பெளத்த மதத்­திற்கு வழங்­கப்­படும். அதில் மாற்றம் இல்லை. இது­வரை காலமும் எவ்­வாறு பௌத்தம் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட்­டதோ அதே­போ­லவே தொடர்ந்தும் காணப்­படும். அதேபோல் ஒரு சட்டம் உரு­வாக்­கப்­ப­டு­வது தொடர்பில் இன்னும் ஆரா­ய­வேண்டும் உள்­ளது. வழக்­கா­று­களை நீக்­கு­வது என்ற விட­யத்தில் இஸ்­லா­மிய சட்டம் சிக்­க­லாக உள்­ளது. கண்­டிய சட்டம் மற்றும் தேச­வ­ழ­மைச்­சட்டம் என்­பன மதத்­துடன் தொடர்­பு­பட்­ட­தல்ல. ஆயினும் இஸ்­லா­மிய சட்டம் அவர்­களின் மத விவா­கங்­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டுள்­ளது. ஆகவே அவற்றை நீக்­கு­வது கடி­ன­மா­னது. இந்த விட­யங்கள் இன்னும் ஆரா­யப்­பட வேண்டும்.

கேள்வி:- தேர்தல் மறு­சீ­ர­மைப்பில் வடக்­கு-­கி­ழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­வது தொடர்பில் ஏதேனும் ஆரா­யப்­பட்­டுள்­ளதா?

பதில்:- இரண்டு மாகா­ணங்­களை இணைத்து தனி அல­காக மாற்­று­வது என்­பது சாதா­ராண விடயம் அல்ல. வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும் என்­பது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கருத்­தாக உள்­ளது. எனினும் மக்­களின் கருத்து அது­வாக உள்­ளதா என்­ப­தையே அவ­தா­னிக்க வேண்டும். இந்த விட­யத்தில் மக்­களின் கருத்து ஆரா­யப்­பட்டு அதற்­க­மைய நட­வ­டிக்கை எடுக்­கப்ட வேண்டும். வெறும் அர­சியல் கார­ணி­களை கருத்தில் கொண்டு செயற்­பட முடி­யாது. அவ்­வாறு செயற்­பட்டால் அது ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தா­கவே அமையும். ஆகவே இந்த விவ­கா­ரத்தை மக்­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­ப­டுத்தி ஆராய வேண்டும்.

கேள்வி:- புதிய அர­சியல் அமைப்­பாக உரு­வாக்­கப்­ப­டுமா அல்­லது இருக்கும் அர­சியல் அமைப்பில் மாற்றம் ஏற்­ப­டுத்தி மறு­சீ­ர­மைக்­கப்­ப­டுமா?

பதில்:- இந்த கேள்­விக்கு இன்னும் நேர­டி­யான பதில் இல்ல. அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் நடை­பெற்று வரு­கின்­றன. ஆனால் உண்­மையில் புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வதே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமையும். காரணம் என்­ன­வெனில்இ 1972ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சியல் அமைப்­பிலும் 1978ஆம் ஆண்டு அர­சியல் அமைப்­பிலும் நாட்டில் நல்ல மாற்­றங்கள் ஏற்­ப­ட­வில்லை. அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்டப்படவில்லை. அதபோல் இந்த அரசியலமைப்பு உருவாக்கத்தின் போதும் பிரதான இரண்டும் கட்சிகளின் கூட்டு ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறாமையே இதற்குக் காரணமாகும். எனினும் இம்முறை பிரதான இரண்டு கட்சிகளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. அதேபோல் எதிர்க்கட்சியும் அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் நகர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. ஆகவே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதே பிரதான பிரச்சினைகளை தீர்க்க சாதகமாக அமையும்.

கேள்வி:- எப்போது புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்?

பதில்:- அதை சரியாக தெரிவிக்க முடியாது. எப்போது பூரணப்படுத்தப்படும் என்பது என்னால் கூற முடியாது. இன்னும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆலோசனைகள் ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால் உருவாக்கத்திற்கான வரைபுகளோ அல்லது யோசனைகளோ இன்னும் முன்னெடுக்கவில்லை. ஆகவே இந்தக் கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை என்றார். 
மாகாணங்களுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்கவேண்டும்.. மாகாணங்களுக்கு பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்கவேண்டும்.. Reviewed by Madawala News on 10/11/2016 09:27:00 AM Rating: 5