Kidny

Kidny

மதீனத்து பூமியின் சிறப்புகளில் சில...

~அ(z)ஸ்ஹான் ஹனீபா~

மதீனத்து பூமியில் கிடைக்கும் நிம்மதிக்கு ஈடு வேறெதுவும் இருக்கமுடியாது...
கட்டுச்சாதனங்கள் எடுத்துக்கொண்டு பிரயாணம் மேற்கொள்ளப்படுவதற்குத் தகுதியான மூன்றில் இரண்டாம் இடத்தை வகிக்கும் மஸ்ஜிதுந் நபவிய்யை உள்ளடக்கியிருக்கும் அழகிய பூமி...
இறை அருளும் பரகத்தும் பரந்திருக்கும் ஓர் அற்புதம் வாய்ந்த பூமி...
வணக்கங்களுக்காக மக்கள் அலை அலையாக திரண்டெழும் புனிதம் பூத்துக்குழுங்கும் ஓர் புவி...
முதல் இஸ்லாமிய சாம்ராஜ்யம் உதித்த பூமி...
இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் ஆரம்பமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பூமி...
நபியவர்களது உபதேசங்கள் ஒலித்த பூமி...
நபியவர்களை மனதார வரவேற்று சிறப்பாக உபசரித்த பூமி...
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பூமி...
நபியவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் பாதங்களை முத்தமிட்ட பூமி...
ஸஹாபாக்கள்,ஷுஹதாக்கள் மற்றும் நல்லவர்களை சுமந்திருக்கும் அருமையான பூமி....
மொத்தத்தில் நபியவர்களது புனித மேனியை சுமந்திருக்கும் பூமி...
ஹிஜ்ரத்துக்குப் பின்னர் கட்டப்பட்ட முதல் ஆலயம் குபா பள்ளிவாயலும், உஹுது மலைத் தொடர்களும், கிப்லதைன் பள்ளியும்,உலக மக்களுக்காக அச்சிடப்படும் அல் குர்ஆன் சர்வதேச அச்சகமும், உலகெங்கிழுமுள்ள பல்லாயிரக்கணக்கான மாணாக்கள் கல்வி கற்கும் இஸ்லாமிய பல்கலைக்கழகமும் மேலும் இஸ்லாத்தின் வரலாற்றுச் சின்னங்களும் அமையப்பெற்ற கண்ணியம் பொருந்திய பூமி...
கல்விக் கோட்டையாக திகழ்ந்து இமாமுல் மதீனா என்று போற்றப்படும் மாலிக் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களை உருவாக்கிய பூமி...
உலகம் போற்றும் உத்தமர்கள், வீரர்கள், மேதைகள், மகான்கள் ஆகியோரது பயிற்சிப்பாசறையாகத் திகழ்ந்த பூமி...

கற்றலும் கற்பித்தலும் மேலோங்கி ஆசான்களும் மாணவர்களும் மனம்விரும்பி தேர்ந்தெடுத்து ஒதுங்கும் ஓர் உன்னத பார்...
மறுமை நெருங்குமிடத்து ஈமானும் தூய இறை விசுவாசிகளும் அடைக்களம் புகும் ஒரேயொரு அருள் நிறைந்த பூமி...
இறுதிநாள் அண்மிக்கும் பொழுது துஷ்டர்கள்,கயவர்கள்,நயவஞ்சகர்கள், இறை நிராகரிப்பாளர்கள் போன்ற அனைவரை விட்டும் பாதுகாக்கப்பட்டு தூய்மையாக காட்சியளிக்கும் தனித்துவமான பூமி...
தான் இறைவன் என வாதிடும் கொடியவன் தஜ்ஜால் உள்நுழையாத சிறந்த பூமி...
இஸ்லாத்தின் இல்லாத அனுஷ்டானங்களை இங்கு வித்திடுபவர்களுக்கு மார்க்கம் எச்சரிக்கைவிடுத்த பூமி...
மதீனத்து பூமியில் பங்கம்,குழப்பம் விளைவிப்போருக்கு இறைவன், வானவர்கள் மற்றும் முழு மனிதர்களது சாபம் உள்ளது என இஸ்லாம் கடுமையாக கண்டித்து பாதுகாக்கும் விஷேட பூமி...

இவ்வாறு சிறப்புகளும் புனிதங்களும் பூத்துக்குழுங்கும் இப்புனித பூமியில் வாழ வல்லவன் அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக! ஆமீன்

நட்புடன் 
அ(z)ஸ்ஹான் ஹனீபா மதனீ 
ஹுஸைனியாபுரம் - பாலாவி
மதீனத்து பூமியின் சிறப்புகளில் சில... மதீனத்து பூமியின் சிறப்புகளில் சில... Reviewed by Madawala News on 10/08/2016 03:24:00 PM Rating: 5